ADVERTISEMENT

RAK டயாபட்டீஸ் சேலஞ்ச் 2025: சுகர் லெவலைக் குறைத்துக் காட்டினால் 5,000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை..!!

Published: 27 Aug 2025, 4:25 PM |
Updated: 27 Aug 2025, 4:27 PM |
Posted By: Menaka

சர்க்கரை வியாதி, டயபட்டீஸ் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நீரிழிவு நோய் உலகின் வேகமாக வளர்ந்து வரும் தீரா நோய்களில் ஒன்றாக மாறியுள்ளது, இது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது மற்றும் சுகர் அளவைக் கட்டுப்படுத்தப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நீரிழிவு உலகளவில் மற்றும் உள்ளூர் அளவில் ஒரு பெரிய சுகாதார சவாலை தொடர்ந்து முன்வைக்கிறது. ஆனால் உங்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்களுக்கு பரிசுகளையும் வெகுமதிகளையும் பெற்றுத் தரும் என்று சொன்னால் உற்சாகத்துடன் சர்க்கரையைக் குறைக்க முயற்சி செய்வீர்கள் இல்லையா? அப்படியான போட்டிதான் RAK டயபட்டீஸ் சேலஞ்ச். இது பங்கேற்பாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் முதல் ஆரோக்கிய வவுச்சர்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்குவதன் மூலம், நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தை ஒரு ஊக்கமளிக்கும், வாழ்க்கையை மாற்றும் போட்டியாக மாற்றுகிறது.

ADVERTISEMENT

வாழ்க்கை முறை மாற்றங்கள், கல்வி மற்றும் மருத்துவ வழிகாட்டுதல் மூலம் வாழ்க்கையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட RAK டயபட்டீஸ் சேலஞ்ச் (RAKDC) அதன் 4வது பதிப்பிற்கு மீண்டும் திரும்புகிறது. RAK மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நாடு தழுவிய முயற்சி ஆகஸ்ட் 29 முதல் நவம்பர் 13, 2025 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும், ஆகஸ்ட் 31 வரை இலவச பதிவு திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2023 தரவுகளின்படி, உலகளாவிய நீரிழிவு குறியீட்டில் ஐக்கிய அரபு அமீரகமானது 15வது இடத்தில் உள்ளது, அதாவது நான்கு பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயினால் அவதிப்படுகிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் இதய நோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது நரம்பு பாதிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படும் வரை பல வழக்குகள் கண்டறியப்படாமல் போவதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் RAK டயபட்டீஸ் சேலஞ்ச் குறிப்பிடத்தக்க நேர்மறை முடிவுகளைக் காட்டியுள்ளது. கடந்த ஆண்டு பதிப்பில் பங்கேற்ற 5,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் வியத்தகு முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. சராசரி HbA1C அளவுகள் 7.49% இலிருந்து 5.07% ஆகக் குறைந்து, பலர் நீரிழிவு நோயிலிருந்து வெளியேறினர், அதே நேரத்தில் பங்கேற்பாளர்கள் மூன்று மாதங்களில் சராசரியாக 4–5 கிலோ எடையைக் குறைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், மருந்து மாற்றங்கள் இல்லாமல் வழிகாட்டப்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சர்க்கரை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இது குறித்து தெரிவிக்கையில் “இது ஒரு விழிப்புணர்வு இயக்கம் மட்டுமல்ல, இது ஒரு வாழ்க்கையை மாற்றும் இயக்கம்” என்று RAK மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராசா சித்திக் கூறியுள்ளார். “இந்த பதிப்பின் மூலம், இன்னும் அதிகமான நபர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் நீரிழிவு குறிப்பான்களை மாற்றியமைக்கவும் நாங்கள் ஊக்குவிப்போம்” என்று உறுதியளித்துள்ளார்.

ADVERTISEMENT

பெரிய மாற்றத்திற்கான பெரிய வெகுமதிகள்

RAKDC ஐப் பொறுத்தவரை, பங்கேற்பாளர்கள் திட்டத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் மதிப்பீடு செய்யப்படுவார்கள், BMI, HbA1C அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையின் (lifestyle score) முன்னேற்றங்களின் அடிப்படையில் மருத்துவ நிபுணர் குழுவால் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

யார் பங்கேற்கலாம்?

5.7 அல்லது அதற்கு மேற்பட்ட HbA1C உடன் 18 வயதுக்கு மேற்பட்ட அமீரக குடியிருப்பாளர்கள் இதில் பங்கேற்கலாம்., இந்த சவால் இரண்டு விருப்பங்களை வழங்குகிறது:

  • பிசிக்கல் பிரிவு: RAK மருத்துவமனை கூடார வசதியில் (RAK Hospital Tent Facility) இலவச BMI மற்றும் HbA1C சோதனைகள் மற்றும் வாழ்க்கை முறை மதிப்பீடு (ஆகஸ்ட் 29–31, காலை 9–மாலை 5 மணி) செய்யப்படும்.
  • விர்ச்சுவல் வகை: ஆகஸ்ட் 31 வரை உங்கள் சொந்த செலவில் அமீரகம் முழுவதும் உள்ள சான்றளிக்கப்பட்ட கிளினிக்குகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், பின்னர் உங்கள் முடிவுகளை பதிவேற்றி வாழ்க்கை முறை மதிப்பீட்டை ஆன்லைனில் முடிக்கவும்.

கூடுதலாக, வாராந்திர சுகாதார வெபினார்கள், ஒர்க் ஷாப்கள் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் வழிகாட்டுதல் ஆகியவை பங்கேற்பாளர்களை ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

20,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ரொக்கப் பரிசுகள் (ஃபிசிக்கல் பிரிவு):

  • முதல் இடம்: 5,000 திர்ஹம்ஸ் (ஆண் & பெண்)
  • 2வது இடம்: 3,000 திர்ஹம்ஸ் (ஆண் & பெண்)
  • 3வது இடம்: 2,000 திர்ஹம்ஸ் (ஆண் & பெண்)

விர்ச்சுவல் வகை வெகுமதிகள்: RAK மருத்துவமனையின் சுவிஸ் சுகாதார சோதனை வவுச்சர்கள் (swiss health check vouchers), 5-நட்சத்திர ஹோட்டல் தங்குமிடங்கள், ஜிம் உறுப்பினர் பதவிகள் மற்றும் வெல்னஸ் ஹேம்பர் (Gym memberships & wellness hampers)

பிற அங்கீகாரங்கள் பின்வருமாறு:

முதல் 10 பங்கேற்பாளர்கள்: சுவிஸ் சுகாதார சோதனைகள் & பிரத்தியேக பரிசுகள்

முதல் 50 பங்கேற்பாளர்கள்: சாதனைச் சான்றிதழ்கள்

சிறந்த நிறுவன அணி: வெல்னஸ் கோப்பை

இதற்கு www.rakdiabeteschallenge.com வழியாக ஆன்லைனில் செய்யவும்.

வாக்-இன் பதிவு: ஆகஸ்ட் 29–31 RAK மருத்துவமனை கூடார வசதியில் (காலை 9–மாலை 5) நேரடியாகவும் பதிவு செய்யலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel