உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் 2026 ஆம் ஆண்டில் ரமலான் பண்டிகையை வரவேற்கத் தயாராகி வரும் நிலையில், பெரும்பாலான அரபு நாடுகளில் ரமலான் செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கும் என்று வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரபு மாதமான ஷாபான் 29 ஆம் தேதி பிறை பார்ப்பதை பொருத்து அதிகாரப்பூர்வ தொடக்க தேதி உறுதிப்படுத்தப்படும். இந்த தேதியானது ஒவ்வொரு நாட்டினுடைய பிறை பார்க்கும் குழு மற்றும் தேசிய நடைமுறைகளுக்கு ஏற்ப அதன் சொந்த அறிவிப்பை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய நாட்காட்டியானது சந்திர சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டதாகும், அதாவது ஒவ்வொரு புதிய அரபு மாதமும் பிறை பார்ப்பதை வைத்தே தொடங்கும். சந்திர மாதம் சூரிய மாதத்தை விட சுமார் 10 முதல் 11 நாட்கள் குறைவாக இருப்பதால், ரமலான் மாதமானது ஆண்டுதோறும் கிரிகோரியன் நாட்காட்டியில் மாறிக்கொண்டே இருக்கும்.
இதன் காரணமாகவே, நீண்ட பகலையும், கடும் வெப்பத்தையும் கொண்ட கோடை நாட்கள் முதல் குறுகிய பகல் நேரத்தையும், குளிர்ந்த வானிலையையும் கொண்ட குளிர்கால நாட்கள் வரை அனைத்து பருவங்களிலும் புனித ரமலான் மாத நோன்பானது 33 வருட சுழற்சியில் மாறி மாறி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel