ADVERTISEMENT

துபாய்: ஷேக் சையத் சாலை போக்குவரத்தை எளிதாக்க புதிய மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடங்கிய RTA!!

Published: 29 Aug 2025, 8:58 PM |
Updated: 29 Aug 2025, 9:00 PM |
Posted By: Menaka

துபாயில் உள்ள ஷேக் சையத் சாலையை அல் வாஸ்ல் சாலையுடன் இணைக்கும் பரபரப்பான சாலையான அல் தன்யா ஸ்ட்ரீட்டில் புதிய போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஷேக் சையத் சாலையின் அல் தான்யா ஸ்ட்ரீட்டுக்குச் செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள ரவுண்டானாவை மேம்படுத்துதல், ஸ்ட்ரீட் 10 உடன் சந்திக்கும் இடத்தில் சிக்னலைஸ் செய்யப்பட்ட ஜங்ஷனை கட்டுதல் மற்றும் கடப்பதை பாதுகாப்பானதாக மாற்ற பாதசாரி நடைபாதைகள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களை சேர்ப்பது ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, இந்த மேம்பாட்டுப் பணிகள் செப்டம்பர் 2025க்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தல்கள் முழுமையாக முடிந்ததும், துபாயின் மிகவும் பரபரப்பான குடியிருப்பு மற்றும் வணிக வழித்தடங்களில் ஒன்றில் நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தவும், பாதசாரி பாதுகாப்பை ஆதரிக்கவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் நகர்ப்புற விரிவாக்கத்திற்கு அதன் சாலை வலையமைப்பைத் தயார்படுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகளுக்கான மையமாக நகரத்தின் நிலையை வலுப்படுத்துவதற்கும் இந்த திட்டம் ஒரு பெரிய நீண்ட கால உத்தியின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT