ADVERTISEMENT

துபாய்: ஃபைனான்ஷியல் சென்டர் ஸ்ட்ரீட்டிலிருந்து ராஸ் அல் கோர் சாலைக்கு புதிய எக்ஸிட் பாதையை திறக்கவுள்ள RTA: பயண நேரம் பாதியாகக் குறையும் எனத் தகவல்!!

Published: 1 Aug 2025, 5:25 PM |
Updated: 1 Aug 2025, 5:25 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒரு புதிய போக்குவரத்து எக்ஸிட் பாதையைத் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது, இது நெரிசலைக் குறைப்பதற்கும் ஃபைனான்ஷியல் சென்டர் ஸ்ட்ரீட்டிலிருந்து ராஸ் அல் கோர் சாலையை நோக்கி பயண நேரத்தை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பு கத்ரா இன்டர்சேஞ்ச் (Bu Kadra Interchange) அருகே உள்ள (collector roads) சாலையில் இருந்து புதிய எக்ஸிட் பாதை பிரிகிறது. இது RTAவின் விரைவான போக்குவரத்து தீர்வுகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது முக்கிய குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை மண்டலங்களை இணைக்கும் ராஸ் அல் கோர் பகுதியில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் முயற்சியாகும். புதிய எக்ஸிட் பாதை செயல்பாட்டுக்கு வந்தவுடன், மேற்கண்ட சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் நெரிசலான நேரங்களில் ராஸ் அல் கோர் சாலையை வெறும் 6 நிமிடங்களில் அணுகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 13 நிமிடங்களில் இருந்து பாதியாகக் குறைகிறது, மேலும் பயண நேரத்தில் 54% குறைக்கப்படுகிறது.

துபாயின் விரைவான நகர்ப்புற விரிவாக்கத்திற்கு இடமளிக்க RTA சமீபத்தில் அறிமுகப்படுத்திய பல மேம்பாடுகளில் இந்தத் திட்டமும் ஒன்றாகும். அவற்றில் மற்றொன்று, ராஸ் அல் கோர் சாலையில் உள்ள 25வது எக்ஸிட் பாதையை விரிவுபடுத்துவது, இது அல் கைல் சாலை மற்றும் அல் மேதான் ஸ்ட்ரீட்டை இணைக்கிறது. அந்த எக்ஸிட்  பாதை 500 மீட்டர் நீளத்தில் ஒன்றிலிருந்து இரண்டு பாதைகளாக விரிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து, இதன் திறனை மணிக்கு 3,000 வாகனங்களாக இரட்டிப்பாக்கியது.

ADVERTISEMENT

இதன் விளைவாக, நெரிசலான நேரத்தில்  பயண நேரங்கள் 7 நிமிடங்களிலிருந்து 4 நிமிடங்களாகக் குறைந்துள்ளன. இந்த மேம்பாடுகள், துபாயின் எதிர்காலத்திற்கு ஏற்ற சாலை உள்கட்டமைப்பையும் நகரத்தின் வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளையும் ஆதரிப்பதற்கான RTAவின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT