ADVERTISEMENT

துபாய் ஏர்போர்ட்டில் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்தை அறிவித்த RTA..

Published: 25 Aug 2025, 6:00 PM |
Updated: 25 Aug 2025, 8:41 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் ஏவியேஷன் சிட்டி கார்ப்பரேஷன் (DACC) உடன் இணைந்து, விமான நிலைய டெர்மினலுக்கான பிரதான அணுகல் பாலத்தை அகலப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதால், துபாய் ஏர்போர்ட்டின் டெர்மினல் 1 ஒரு பெரிய மேம்பாட்டிற்கு தயாராக உள்ளது.

ADVERTISEMENT

புதிய ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டம், நெரிசலைக் குறைத்து மில்லியன் கணக்கான பயணிகளுக்கு பயணத்தை சீராக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையம் கடந்த 2024 ஆம் ஆண்டில் 92 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்றது, மேலும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்கள் விமான நிலையத்தை அடைவதை விரைவாகவும் திறமையாகவும் மாற்ற இந்த மேம்பாட்டுத் திட்டம் வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

பால விரிவாக்க விவரங்கள்

ADVERTISEMENT

இது குறித்து RTA இன் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் தாயர் கூறுகையில், பாலம் மூன்றிலிருந்து நான்கு பாதைகளாக அகலப்படுத்தப்படும் என்று விவரித்துள்ளார். “இந்த தீர்வு தற்போதைய போக்குவரத்து ஓட்டத்தை சீர்குலைக்காமல் விரைவான கட்டுமானத்தை அனுமதிக்கிறது. அத்துடன் மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்கிறது” என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

  • பாலத்தின் நீளம்: 171 மீட்டர் (பிரதான நீளம் கிட்டத்தட்ட 70 மீட்டர்)
  • பாலத்தின் திறன்: இந்த விரிவாக்கம் மூலம் பாலத்தின் திறன் மணிக்கு 4,200 முதல் 5,600 வாகனங்கள் வரை (33% அதிகரிப்பு) அதிகரிக்கும்
  • கூடுதல் மேம்பாடுகள்: சாலை நடைபாதை மேம்பாடுகள், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் புதிய தெரு விளக்குகள் அமைத்தல்

மேற்கூறிய விரிவாக்கத் திட்டம் பாதை திறனை அதிகரிக்கும், பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் போக்குவரத்து உச்ச நேரங்களில் நெரிசலைக் குறைக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த திட்டம் RTA வின் ஏர்போர்ட் ஸ்ட்ரீட்டுக்கான முந்தைய மேம்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது, இதில் பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலையிலிருந்து காசாபிளாங்கா ஸ்ட்ரீட் வரையிலான இண்டர்செக்ஷன் மேம்பாடுகள் அடங்கும் என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பிடத்தக்க பணிகள்:

  • டெர்மினல் 3 மற்றும் துபாய் ஏவியேஷன் இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ் (DAEP) வளாகத்திற்கு நேரடி அணுகலை வழங்கும் பாலங்கள்
  • போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமல் விமான நிலைய ஸ்ட்ரீட்டை காசாபிளாங்கா ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் பாலம்
  • அல் கர்ஹூத்தில் இருந்து டெர்மினல்கள் 1 மற்றும் 3 க்கு மாற்று பாதை
  • காசாபிளாங்கா ஸ்ட்ரீட்டை பாதையை விரிவுபடுத்துதல்

இந்தத் திட்டங்கள் அனைத்தும், உலகின் பரபரப்பான விமான மையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மென்மையான போக்குவரத்து ஓட்டத்தையும் சிறந்த இணைப்பையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel