ADVERTISEMENT

GCC: ரியல் ஹீரோ இவர்தான்!! பெட்ரோல் நிலையத்திலிருந்து எரியும் லாரியை ஓட்டிச் சென்று பேரழிவைத் தவிர்த்த இளைஞர்…

Published: 19 Aug 2025, 11:24 AM |
Updated: 19 Aug 2025, 11:27 AM |
Posted By: Menaka

சவுதி தலைநகர் ரியாத்தின் அல்-தவாத்மி (Al-Dawadmi) கவர்னரேட்டில் ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுக்க தனது உயிரைப் பணயம் வைத்து சவுதி நபர் செய்த துணிச்சலான செயல் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. பெட்ரோல் நிலையம் அருகே கால்நடை தீவனம் ஏற்றப்பட்ட லாரி ஒன்றில் திடீரென தீப்பிடித்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

உள்ளே ஓட்டுநர் இல்லாமல் எரியும் வாகனத்தைக் கண்ட மஹர் ஃபஹத் அல்-தல்பாஹி என்பவர், தீப்பிழம்புகளை நோக்கி விரைந்திருக்கிறார். மேலும் தயக்கமின்றி, லாரியில் குதித்து எரிபொருள் நிலையத்தில் இருந்து அதை ஓட்டிச் சென்று, ஒரு பெரிய பேரழிவைத் தவிர்த்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

அவரது துணிச்சலான நடவடிக்கை எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் குறிப்பிடத்தக்க சேதத்தைத் தடுத்தது என கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலானது, பலர் அல்-தல்பாஹியின் வீரத்தைப் பாராட்டி தங்களின் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமூக ஊடகங்களில் பலர் அவரது நல்வாழ்வு குறித்து விசாரித்து வரும் நிலையில், அல்-தல்பாஹிக்கு அவரது முகம், தலை மற்றும் கைகால்களில் முதல் மற்றும் இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டதாக அவரது உறவினர் ஒருவரால் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் சம்பவம் நிகழ்ந்ததும் உடனடியாக ரியாத்தில் உள்ள கிங் சவுத் மெடிக்கல் சிட்டியில் (King Saud Medical City) அனுமதிக்கப்பட்திருப்பதாகவும், அங்கு சிறப்பு மருத்துவ குழுக்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர் காலித் அல்-ஆரித் உட்பட குடும்ப உறுப்பினர்கள், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் அறிக்கைகள் கூறுகின்றன.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT