ADVERTISEMENT

துபாயில் உள்ள கார் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: பல வாகனங்கள் எரிந்து நாசம்..!!

Published: 7 Aug 2025, 10:03 AM |
Updated: 7 Aug 2025, 10:03 AM |
Posted By: Menaka

துபாயில் இருக்கக்கூடிய அல் அவிரில் உள்ள துபாய் ஆட்டோ மண்டலத்தில் (Dubai Auto Zone) கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீவிபத்தால் உள்ள பல கார் ஷோரூம்கள் சேதமடைந்துள்ளன. கடந்த சனிக்கிழமை மதியம் துபாய் ஆட்டோ மண்டலத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து, பல கார் ஷோரூம்களை சேதப்படுத்தியது மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில், சேதமடைந்த கட்டிடங்களைச் சுற்றி போலீஸ் டேப் இன்னும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, விசாரணைகள் தொடர்வதால் பாதிக்கப்பட்ட பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் எரிந்த பொருட்களின் கடுமையான வாசனை காற்றில் நீடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் அருகிலுள்ள ஷோரூம் ஊழியர்களின் கூற்றுப்படி, சனிக்கிழமை பிற்பகல் விஐபி ஸ்டார்ஸ் ஷோரூமில் தீ தொடங்கியது. பின்னர் அது அல் ஃபலாசி கார்கள் உட்பட அருகிலுள்ள விற்பனை நிலையங்களுக்கு விரைவாக பரவியது, இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது என கூறியுள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த துபாய் சிவில் பாதுகாப்பு குழுக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், தீயணைப்பு வீரர்கள் விரைவாகச் செயல்பட்டு, அதிக எண்ணிக்கையிலான கார் டீலர்ஷிப்கள் மற்றும் கேரேஜ்களைக் கொண்ட ஆட்டோ மண்டலத்தில் தீ மேலும் பரவுவதற்கு முன்பு தீயை அணைக்க முடிந்தது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சேதத்தின் முழு அளவு இன்னும் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில், தீ விபத்தில் பல வாகனங்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக சம்பவ இடத்தில் உள்ள ஊழியர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையை அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களும் குடியிருப்பாளர்களும் பாராட்டி வருகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT