சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல திட்டங்களை ஷார்ஜா மேற்கொண்டு வரும் நிலையில் தற்பொழுதுள்ள இந்த ஆண்டு இறுதியில் அதன் கிழக்கு கடற்கரையில் ஒரு புதிய சுற்றுச்சூழல் ஓய்வு விடுதியை (eco-retreat) அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, இது ஆடம்பரத்தையும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கலக்கும் ஆஃப்-கிரிட் விருந்தோம்பல் (off-grid hospitality) கான்செப்ட்டை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள ‘Nomad’ எனும் இந்த திட்டம் கல்பாவின் மலை பள்ளத்தாக்குகளில், கல்பா நேச்சர் ரிசர்வ் அருகே அமைந்திருக்கும் 20 சூரிய சக்தியில் இயங்கும் டிரெய்லர்களைக் (மொபைல் வீடு) கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரவு-வானத் தெரிவுநிலையைப் பாதுகாக்கும் அதே வேளையில் டிஜிட்டல் துண்டிப்பை ஊக்குவிக்க வைஃபை இல்லாத, விளக்குகள் அணைக்கப்படும் அணுகுமுறையுடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, விருந்தினர்கள் இணையதளம் இல்லாமல் மற்றும் விளக்குகளின் வெளிச்சம் இன்றி இயற்கையான இரவு வானத்தின் வெளிச்சத்தில் அன்புக்குரியவர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடலாம் என கூறப்படுகின்றது.
ஷார்ஜா கலெக்சனில் (Sharjah Collection) Nomad சமீபத்திய புதிய திட்டமாகும். இது ஷார்ஜா முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (Shurooq) இயக்கப்படும் சுற்றுச்சூழல் ஓய்வு விடுதிகளின் ஒரு தொகுப்பாகும். கடந்த சில ஆண்டுகளில், ஷுரூக் இந்த நெட்வொர்க்கை விரிவுபடுத்த 300 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. இது இப்போது எமிரேட்டின் பாலைவனங்கள், கடற்கரைகள், மலைகள் மற்றும் பாரம்பரிய நகரங்களில் ஏழு இடங்களுக்கு பரவியுள்ளது. கலாச்சார அடையாளம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், பார்வையாளர்களுக்கு மெதுவான, சிறந்த பயண அனுபவங்களை வழங்கும் வகையில் இந்த மேம்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஷார்ஜா கலெக்சனில் இப்போது பல்வேறு நிலப்பரப்புகளில் 154 தங்குமிட பகுதிகள் உள்ளன. அவற்றில் அல் ஃபயா ரிட்ரீட் மிலீஹாவில் உள்ளது, இது 1960களின் இரண்டு கட்டிடங்களை ஐந்து அறைகள் கொண்ட தங்குமிடங்களாக (boutique property) மாற்றியுள்ளது. அதே போல் கல்பாவில் உள்ள கிங்ஃபிஷர் ரிட்ரீட் ஒரு பாதுகாக்கப்பட்ட சதுப்புநில காப்பகத்திற்குள் 40 கூடாரங்களை வழங்குகிறது.
அல் படேயர் ரிட்ரீட்டை பொறுத்தவரை, ஷார்ஜாவின் சிவப்பு குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டு பாரம்பரிய கேரவன்செராய் பாணியில் வடிவமைக்கப்பட்டு மணற்குன்று சாகசங்கள் மற்றும் ஒட்டக சவாரிகளை வழங்குகிறது. நஜ்த் அல் மெக்சார், மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய வீடுகள் மற்றும் 300 ஆண்டுகள் பழமையான கோட்டையை ஒருங்கிணைக்கிறது. அதேபோல், அல் ராயாஹீன் ரிட்ரீட், கோர்பக்கானில் உள்ளது, அங்கு 19 பாரம்பரிய வீடுகள் ஷார்ஜா இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெரிடேஜ் உடன் இணைந்து விருந்தினர் வசதிகள் மற்றும் கலாச்சார இடங்களாக மறுபயன்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த இடங்கள் அனைத்தும், ஷுரூக்கின் பரந்த 850 மில்லியன் திர்ஹம் விருந்தோம்பல் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக அமைகின்றன, இது பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் உணர்வுள்ள மற்றும் கலாச்சார ரீதியாக மூழ்கும் பயணத்திற்கான முன்னணி இடமாக ஷார்ஜாவை நிலைநிறுத்துகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel