துபாயின் சிலிக்கான் சென்ட்ரல் மாலில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் அறிவிக்கப்படாத வருகையால், வாடிக்கையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். எமிரேட்டில் பொது இடங்களில் மக்களுடன் மக்களாக எளிமையாக நடந்து செல்வதற்கு பெயர் பெற்ற துபாய் ஆட்சியாளரின் இந்த ஆச்சரியமான தோற்றம் மால் முழுவதும் உடனடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷேக் முகமதுவைக் கண்டு ஆச்சரியப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் மொபைல் போன்களில் இந்த தருணத்தைப் படம்பிடித்துள்ளனர். இதையடுத்து, துபாய் ஆட்சியாளரின் எதிர்பாராத வருகையின் வீடியோ விரைவாக ஆன்லைனில் வைரலாகியது. லுலு குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் இதை ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று கூறி, “இது போன்ற தருணங்கள் விற்பனையில் சிறந்து விளங்க எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
ஷேக் முகமது மாலை 6:00 மணியளவில் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு வந்து, மளிகைப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள், பேக்கரி, சூடான உணவு, மீன், ஆடைகள் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட கடையின் பல்வேறு பகுதிகளைச் சுற்றி ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஷேக் முகமதுவை அருகில் இருந்து பார்த்ததில் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, ஷேக் முகமது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருவருடனும் அன்பாகப் பழகினார், கடையை ஆராய்ந்து பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள நேரம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வருகை, பலருக்கும் மறக்க முடியாத தருணங்களாக மாறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel