ADVERTISEMENT

சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்த அமீரகத் தலைவர்கள்!!

Published: 15 Aug 2025, 6:36 PM |
Updated: 15 Aug 2025, 6:45 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தலைவர்கள் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று இந்தியா அதன் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தவேளையில், இந்தியத் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், துபாய் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவரான ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான் ஆகியோரும் இந்தியாவின் ஜனாதிபதிக்கு இதே போன்ற செய்திகளை அனுப்பியுள்ளனர்.

கூடுதலாக, ஷேக் முகமது பின் ரஷீத் மற்றும் ஷேக் மன்சூர் ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவை போன்று விடுதலை தினத்தை கொண்டாடும் காங்கோ பிரதமர் அனடோல் கோலினெட் மகோசோ, தென் கொரியப் பிரதமர் கிம் மின்-சியோக் மற்றும் லிச்சென்ஸ்டீன் பிரதமர் பிரிஜிட் ஹாஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel