அமீரகம் முழுவதும் உள்ள பள்ளிகள் இரண்டு மாத கோடைவிடுமுறைக்குப் பிறகு, அண்மையில் 2025–26 புதிய கல்வியாண்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் வகுப்பறைகளுக்குத் திரும்பியதாகக் கூறப்படும் நிலையில், AI பாடத்திட்டத்தின் அறிமுகத்திலிருந்து, மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் பள்ளி பாதுகாப்பு நடவடிக்கைகள் வரை, நடப்பு கல்வியாண்டிற்கு ஒரு சீரான மற்றும் வளமான தொடக்கத்தை உறுதி செய்ய அதிகாரிகளும் பள்ளி நிர்வாகமும் தயாராகி வருகின்றன.
புதிய கல்வியாண்டில் நடைமுறைக்கு வந்துள்ள பெரிய மாற்றங்கள் குறித்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
துபாய் காவல்துறையின் பாதுகாப்பு வரைபடம்
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி மண்டலங்களைப் பாதுகாக்க துபாய் காவல்துறை ஒரு விரிவான பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளது, பள்ளிகளைச் சுற்றி 250 பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ரோந்துப் பணியாளர்களை நியமித்தல், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் ரோந்து செல்லுதல் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு இயக்கங்களை நடத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
AI பாடத்திட்டம் அறிமுகம்
முதல் முறையாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகள் AI பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன, இது எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கற்றலை நோக்கிய நாட்டின் உந்துதலை பிரதிபலிக்கும்.
போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துதல்
பள்ளிக்குச் செல்லும் போதும், வீட்டுக்குத் திரும்பும் போதும் பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்வதற்காக ஓட்டுநர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன், பள்ளிகளைச் சுற்றி போக்குவரத்து மேம்பாடுகளை RTA அறிவித்துள்ளது
பள்ளி மண்டல பகுதிகளில் விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கை
பள்ளி மண்டலங்களில் வேகம், சட்டவிரோத வாகன நிறுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கான அபராதங்களை அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனர்.
மாணவர்களுக்கு 135 நாட்கள் விடுமுறை
புதிய பள்ளி காலண்டரில் வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் பருவ இடைவேளைகளில் என மாணவர்களுக்கு 135 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது,
புதிய பள்ளிகள் விரைவில் தொடங்க உள்ளன
துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் திறக்கப்படவிருக்கும் பல புதிய பள்ளிகள் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய நவீன வசதிகள் மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel