ADVERTISEMENT

அமீரகத்தில் கடுமையான வெப்பம் நீடிக்கும்!! சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் NCM தகவல்…

Published: 20 Aug 2025, 12:17 PM |
Updated: 20 Aug 2025, 12:25 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் கடுமையான கோடை வெப்பத்தின் பிடியில் உள்ள நிலையில், நாட்டின் பெரும்பகுதியில் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தலைநகர் அபுதாபியில், பெரும்பாலும் வெயில் மற்றும் மிகவும் வெப்பமான சூழ்நிலைகள் இருக்கும் என்று இன்றைய முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது, அதிகபட்சமாக வெப்பநிலை 42°C ஆக உயரும். அத்துடன் இன்றிரவு வெப்பநிலை 34°C வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது. துபாயைப் பொறுத்த வரை, அதிகபட்சமாக 43°C ஐ பதிவு செய்து இன்னும் வெப்பமாக உள்ளது. இன்றிரவு, தெளிவான வானத்தின் கீழ் வெப்பநிலை 34°C இல் நிலையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, இன்றைய வானிலை நிலவரம், குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மேகமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வெப்பச்சலன மேகங்கள் ஆங்காங்கே பல பகுதிகளில் மழைப்பொழிவை உண்டாக்கக்கூடும், மேலும் இதே போன்ற நிலைமைகள் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் வெப்பநிலை வரம்புகள்

நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை, படா டஃபாஸில் (அல் தஃப்ரா பகுதி) மதியம் 1:30 மணிக்கு 47.3°C இருந்தது எனக் கூறப்பட்டுள்ளது

  • உள் பகுதிகள்: 43°C – 47°C
  • கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகள்: 40°C – 45°C
  • மலைப் பகுதிகள்: 30°C – 36°C

காற்று மற்றும் தூசிப் புயல்

மாறுபட்ட வானிலைக்கு மத்தியில், அவ்வப்போது காற்று லேசானது முதல் மிதமானது வரை வீசக்கூடும், ஒரு சில சமயம், காற்று மணிக்கு 45 கிமீ வேகத்தில் வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தூசி மற்றும் மணலைக் கிளறி, தென்கிழக்கு முதல் வடகிழக்கு வரையிலான பகுதிகளில் தெரிவுநிலையைக் குறைக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் நிலைமைகளைப் பொறுத்த வரை, அரேபிய வளைகுடாவில் லேசானது முதல் மிதமானதாகவும், ஓமன் கடலில் லேசானதாகவும் நிலைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாதுகாப்பு ஆலோசனை

எனவே, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் நீரேற்றத்துடன் இருக்கவும், அதிக வெயில் நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்கவும், தெளிவுத்தன்மை திடீரென குறையக்கூடிய தூசி நிறைந்த பகுதிகளில் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டவும் அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel