ADVERTISEMENT

UAE: வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து அபராதங்களில் 35% வரை தள்ளுபடி..!! அபுதாபி காவல்துறை அறிவிப்பு..!!

Published: 13 Sep 2025, 12:46 PM |
Updated: 13 Sep 2025, 12:48 PM |
Posted By: Menaka

அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள வாகன ஓட்டிகள் இப்போது TAMM ஆப்ஸ் மூலம், போக்குவரத்து அபராதங்களில் பிரத்தியேக தள்ளுபடிகளை அனுபவிக்க முடியும். இது குறித்து அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எமிரேட்டில் TAMM ஆப்ஸ் மூலம் அபராதங்களை செலுத்தும் ஓட்டுநர்கள் 35 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த சலுகைகள் TAMM செயலிக்கு மட்டுமே பிரத்தியேகமானவை என்றும் வங்கி செயலிகள், அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச் அல்லது உள்துறை அமைச்சகத்தின் செயலி போன்ற பிற சேனல்களில் தோன்றாது என்றும் அபுதாபி காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

தள்ளுபடி விபரங்கள்

  • 35% தள்ளுபடி: விதிமீறல் நடந்த 60 நாட்களுக்குள் அபராதம் செலுத்தப்பட்டால் (கடுமையான குற்றங்களைத் தவிர).
    25% தள்ளுபடி: அபராதம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை செலுத்தப்பட்டால் இது பொருந்தும்.

இந்த முயற்சி, நெகிழ்வான விருப்பங்களுடன் ஓட்டுநர்களை ஆதரிக்கும் அதே வேளையில், சரியான நேரத்தில் அபராதம் செலுத்துவதை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel