ADVERTISEMENT

ஓட்டுநர்கள் தங்களின் பிளாக் பாயிண்ட்களை அகற்ற புதிய சேவையைத் தொடங்கிய அபுதாபி காவல்துறை!!

Published: 3 Sep 2025, 8:24 AM |
Updated: 3 Sep 2025, 8:24 AM |
Posted By: Menaka

அபுதாபியில் உள்ள வாகன ஓட்டுநர்கள் இப்போது தங்கள் ஓட்டுநர் பதிவிலிருந்து பிளாக் பாய்ண்ட்களை நீக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆம், அபுதாபி காவல்துறை சனிக்கிழமை ADNEC சென்டரில் நடைபெற்ற ‘Abu Dhabi International Hunting and Equestrian Exhibition (ADIHEX) 2025’ கண்காட்சியின் போது ஓட்டுநர் உரிமங்களில் உள்ள பிளாக் பாய்ண்ட்களை குறைப்பதற்கான ஒரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

போக்குவரத்துக் கோப்புகளில் குவிந்த பிளாக் பாயிண்ட்களை குறைக்க அல்லது முற்றிலுமாக நீக்க, ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7 வரை ADIHEX இல் உள்ள ஹால் எண். 12 இல், நடைபெறும் இந்தக் கண்காட்சியின் போக்குவரத்து பட்டறைகள் மற்றும் படிப்புகளில் கலந்து கொள்ளுமாறு அபுதாபி காவல்துறை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

24 கருப்பு புள்ளிகளைக் குவித்த ஓட்டுநர்கள் இந்த பூத்தில் பதிவுசெய்து, 2400 திர்ஹம் செலுத்தி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான மறுவாழ்வு வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம் தங்கள் ஓட்டுநர் உரிமங்களைத் திரும்பப் பெறலாம். மேலும், 8 முதல் 23 வரையிலான பிளாக் பாயிண்ட்களை குவித்த ஓட்டுநர்கள், பதிவு செய்து, 800 திர்ஹம் செலுத்தி, வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம் 8 ப்ளாக் பாயிண்ட்களைக் கழிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான போக்குவரத்து மீறல்களுக்கு பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படுகின்றன, மேலும் ஒரு வருடத்தில் 24 புள்ளிகளைக் குவிப்பது உரிமத்தை ரத்து செய்வதற்கு வழிவகுக்கிறது. எனவே, இந்த புதிய நடவடிக்கைகளின் மூலம், ஓட்டுநர்கள் நடத்தையைச் சரிசெய்து, மீண்டும் வாகனம் ஓட்ட வாய்ப்பளிக்கும் அதே வேளையில், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அதிகாரிகள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை தொடர்ந்து, நாடு தழுவிய ‘விபத்துக்கள் இல்லாத ஒரு நாள்’ பிரச்சாரம் (ஆகஸ்ட் 25) நடைபெற்றது. அதன் மூலம், பதிவு செய்த ஓட்டுநர்களுக்கு நான்கு பிளாக் பாயிண்ட்களை நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel