ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று செப்டம்பர் 23 முதல், இரவு மற்றும் பகல் இண்டும் சமமான நேரத்துடன் இருப்பதை குறிக்கும் ‘autumnal equinox’ எனப்படும் சம நேர இலையுதிர்காலம் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கோடை காலத்தில் பகல் நேரம் அதிகமாகவும், இரவு நேரம் குறைவாகவும் இருந்து வந்த நிலையில், இன்று முதல் பகல் மற்றும் இரவு நேரங்கள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 12 மணிநேரங்களுடன் சமநிலையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நாட்டில் குளிரான இரவுகள், குறுகிய பகல்கள் மற்றும் வெப்பமான நிலையிலிருந்து குளிரான நிலைக்கு மாறிவரும் காற்று ஆகியவற்றின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. NCMஇன் கூற்றுப்படி, செப்டம்பர் மாத இறுதியில் இருந்து வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த பருவ மாற்றம் கிழக்குப் பகுதிகளில் மழை (cumulonimbus) மேகங்கள் உருவாக அதிக வாய்ப்பைக் கொண்டிருப்பதாகவும், இந்த மேகங்கள் மழை, இடியுடன் கூடிய மழையை நாட்டின் கடலோர பகுதிகளில் உருவாக்கக்கூடும் என்றும் NCM தெரிவித்துள்ளது. மேலும் சில சந்தர்ப்பங்களில், மாறுபட்ட தீவிரத்துடன் நாட்டின் உள் பகுதிகளிலும் வானிலை மாற்றம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட இரவுகளுக்கு தயாராகும் அமீரகம்
செப்டம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை செல்லும்போது, இரவுகள் நீடிக்கும் மற்றும் வெப்பநிலை சீராகக் குறையும், இது அமீ்கத்தின் குளிர்கால மாதங்களின் லேசான மற்றும் இனிமையான வானிலைக்கு வழி வகுக்கும். இந்தப் பருவகால மாற்றம், குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வெளிப்புற நடவடிக்கைகளை மிகவும் சுவாரஸ்யமாக அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel