ADVERTISEMENT

UAE: 750 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் எமிரேட்ஸ் சாலை மேம்பாட்டுத் திட்டம்.. பயண நேரம் பாதியாகக் குறையும் என தகவல்!!

Published: 27 Sep 2025, 5:01 PM |
Updated: 27 Sep 2025, 5:04 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான எமிரேட்ஸ் சாலையில் சுமார் 750 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் ஒரு பெரிய மேம்படுத்தல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் (MoEI) அறிவித்துள்ளது. இதன் மூலம், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன், ஷார்ஜா மற்றும் துபாய் இடையேயான பயணிகளுக்கான பயண நேரம் 45 சதவீதம் குறையும் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT

இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டம், அல் பதீ இன்டர்சேஞ்சிலிருந்து உம் அல் குவைன் வரையிலான சாலையின் 25 கிமீ நீளத்தை விரிவுபடுத்தும், ஒவ்வொரு திசையிலும் மூன்றிலிருந்து ஐந்து பாதைகளாக அகலப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்ததும், சாலையின் திறன் மணிக்கு 9,000 வாகனங்களாக உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 65% அதிகரிப்பாகும்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • இன்டர்சேஞ்ச் எண். 7 மேம்படுத்தல்: 12.6 கிமீ நீளமுள்ள ஆறு புதிய திசை பாலங்கள் (directional bridges) அமைக்கப்படும், இதனால் வாகனங்கள் செல்லும் திறன் மணிக்கு 13,200 ஆக அதிகரிக்கும்.
  • சர்வீஸ் சாலைகள்: எமிரேட்ஸ் நெடுஞ்சாலையின் இருபுறமும் 3.4 கி.மீ இணையான சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படும்.

பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு

MoEI இன் கூற்றுப்படி, இந்த விரிவாக்கம் போக்குவரத்து நெரிசலை எளிதாக்குவது மட்டுமல்லாமல், நெரிசல்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் உதவும், அதே நேரத்தில் எமிரேட்ஸ் இடையே வர்த்தகத்தை வலுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

“இந்த மேம்பாடு அமீரகத்தின் விரைவான மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் மிகவும் மேம்பட்ட, திறமையான மற்றும் நிலையான கூட்டாட்சி வலையமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாகும்,” என்று MoEI இன் கூட்டாட்சி உள்கட்டமைப்பு திட்டத் துறையின் உதவி துணைச் செயலாளர் யூசுப் அப்துல்லா கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT