ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை (செப்டம்பர் 12), ராஸ் அல் கைமாவின் தெற்கே உள்ள வாடி எஸ்ஃபிடாவில் (Wadi Esfita) உள்ள ஒரு வீட்டில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதையடுத்து, அந்த வீட்டின் பணிப்பெண் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
40 வயதுடைய ஆசிய நாட்டைச் சேர்ந்த வீட்டு வேலைக்காரப் பெண்மணி விபத்தில் ஏற்பட்ட சமயத்தில் சமையலறையில் இருந்திருக்கிறார். அப்போது அவரது உடலின் பெரும்பகுதியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டன என கூறப்பட்டுள்ளது. முதலில் அவர் ஃபுஜைரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஷேக் கலீஃபா சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு 20 அறுவை சிகிச்சைகள் வரை தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து தெரிவிக்கையில் “தீ விபத்திற்கு பிறகு அவரது நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். எல்லாம் கடவுளின் கைகளில் உள்ளது.” என்று அல்-லைலி உணர்சிவசப்பட்டு பேசியுள்ளார். இந்நிலையில், அவரது வேலைக்கு வசதி செய்த வீட்டு வேலை செய்யும் நிறுவனம், வெளிநாட்டில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பெண் நான்கு மாதங்கள் மட்டுமே குடும்பத்துடன் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வீட்டில் வசிப்பவர்களில் ஒருவரான முசாஃபா முஹம்மது அல்-லைலி, தெரிவிக்கையில் அவரும் அவரது சகோதரியும் வெளியே இருந்தபோது மாலை தொழுகைக்கான அழைப்பின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறியுள்ளார். “முதலில், அது ஒரு கதவு தட்டப்படும் சத்தம் என்று நான் நினைத்தேன், ஆனால் பின்னர் வீட்டுப் பணிப்பெண்களில் ஒருவர், ‘தீ, தீ!’ என்று கத்துவதைக் கேட்டோம், அப்போதுதான் நாங்கள் விரைந்து சென்று சேதத்தைக் கண்டோம்.” என்று அல்-லைலி சம்பவத்தை விவரித்துள்ளார்.
உடனடியாக, ராஸ் அல் கைமா காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு இன் அவசர குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதிலளித்ததாகவும், தீயணைப்பு விசாரணை நிபுணர்கள் வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய புலனாய்வு செய்யத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
கேஸ் சிலிண்டர் குழாயை எலி கடித்ததால் கசிவு ஏற்பட்டதாகவும், அது தீப்பிடித்து சக்திவாய்ந்த வெடிப்பை ஏற்படுத்தியதாகவும் புலனாய்வாளர்கள் பின்னர் உறுதிப்படுத்தினர். வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் சமையலறை கதவு 50 மீட்டர் தூரத்திற்கு வீசப்பட்டது. ஏர் கண்டிஷனர், குளிர்சாதன பெட்டி போன்ற சாதனங்கள் அழிக்கப்பட்டன, பிளாஸ்டிக் கூரை இடிந்து விழுந்தன, பாத்திரங்கள் கடுமையான வெப்பத்தில் உருகியதாக அல்-லைலி கூறியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வீட்டுப் பாதுகாப்பு குறித்து குடும்பங்கள் விழிப்புடன் இருக்குமாறு அல்-லைலி வலியுறுத்தியுள்ளார்: “சமைப்பதற்கு முன் அனைவரும் தங்கள் எரிவாயு இணைப்புகளைச் சரிபார்த்து காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும். எலி பைப்பைக் கடிப்பது போன்ற சிறிய விஷயம் கூட பேரழிவுக்கு வழிவகுக்கும்.” என்று கூறியுள்ளார்.
வெடிப்பின் போது வேறு எந்த குடும்ப உறுப்பினர்களும் வீட்டில் இல்லை என்றாலும், அல்-லைலி குடும்பத்தினர் தாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் காயமடைந்த தொழிலாளியை ஆதரிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel