ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் போது அசல் எமிரேட்ஸ் ஐடியை உடன் எடுத்துச் செல்வது அனைவரும் கடைபிடிப்பதுதான் என்றாலும் அதற்கு ஒரு பிரத்யேக காரணம் இருக்கின்றது. ஏனெனில், கடந்த 2022 முதல், எமிரேட்ஸ் ஐடியானது அதிகாரப்பூர்வமாக பாஸ்போர்ட்டில் உள்ள ரெசிடென்ஸ் விசா ஸ்டாம்பிங் தேவையை நீக்கியுள்ளது. அதாவது எமிரேட்ஸ் ஐடி ஒன்றே அமீரகத்தில் வசிப்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றாகும்.
மேலும், வெளிநாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகள் இது இல்லாமல் உங்களை அமீரக விமானத்தில் ஏற அனுமதிக்க மாட்டார்கள். சமீபத்தில் எமிரேட்ஸ் ஐடியை தன்னிடம் வைத்திராத இந்திய பயணிகளை விமானத்தில் பயணிக்க விடாமல் தடுத்த சம்பவம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதே போல் இந்த விதி நடைமுறைக்கு வந்த சமயத்தில் எமிரேட்ஸ் ஐடியை கொண்டு செல்லாததால் பலர் விமான நிலையத்தில் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமீரக குடியிருப்பாளர்களுக்கான முக்கிய குறிப்பு
- வெளிநாடு பயணம் செய்யும் போது எப்போதும் உங்கள் அசல் எமிரேட்ஸ் ஐடியை எடுத்துச் செல்லுங்கள்.
- புகைப்படங்கள், நகல் அல்லது உங்கள் தொலைபேசியில் உள்ள டிஜிட்டல் பதிப்பை நம்ப வேண்டாம்.
- அட்டையை உங்கள் பணப்பையிலோ அல்லது பாஸ்போர்ட் ஹோல்டரிலோ வைத்திருப்பது உங்கள் நேரத்தையும், மன அழுத்தத்தையும், எதிர்பாராத செலவுகளையும் மிச்சப்படுத்தும்.
எனவே, நீங்கள் அமீரக குடியிருப்பாளராக இருந்தால், உங்கள் எமிரேட்ஸ் ஐடி உங்கள் பாஸ்போர்ட்டைப் போலவே முக்கியமானது என்பதையும், அது இல்லாமல், நீங்கள் அமீரகம் திரும்ப முடியாமல் போகலாம் என்பதையும் நினைவில் கொள்வது அவசியமாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel