துபாய் மெட்ரோ ப்ளூ லைன் விரிவாக்கத்திற்காக கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சென்டர்பாயிண்ட் ஸ்டேஷன் அருகே சாலை மூடலை அறிவித்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் தற்காலிக போக்குவரத்து மாற்று வழியை பயன்படுத்துமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர்போர்ட் சாலையில் இருந்து மெட்ரோ நிலையத்தின் பல மாடி பார்க்கிங்கிற்கு செல்லும் சாலை இப்போது மூடப்பட்டுள்ளது, எனவே, 49C ஸ்ட்ரீட் வழியாக அணுகும் வகையில், கார் பார்க்கிங்கின் மேற்குப் பக்கத்திற்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது என்று RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான காலத்தில் போக்குவரத்து தாமதங்களைத் தவிர்க்கவும், சீரான பயணங்களை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, திசை பதாகைகளைப் பின்பற்றவும், முன்கூட்டியே பயணங்களைத் திட்டமிடவும், மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel