ADVERTISEMENT

துபாய்: புதிய பாதையை திறந்து வைத்த RTA!! போக்குவரத்தை எளிதாக்குவதுடன் பயண நேரம் குறையும் என தகவல்…

Published: 8 Sep 2025, 9:55 PM |
Updated: 8 Sep 2025, 9:55 PM |
Posted By: Menaka

அமீரகம் முழுவதும் புதிய கல்வியாண்டு தொடங்கி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், ஏராளமான மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புகின்றனர். இந்நிலையில், பள்ளிமண்டலங்களைச் சுற்றி போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நாத் அல் ஹமர் சாலையில் 850 மீட்டர் புதிய பாதையைத் திறந்து வைத்துள்ளது.

ADVERTISEMENT

நெருக்கடியைக் குறைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், பரபரப்பான குடியிருப்பு மாவட்டத்திற்கு மென்மையான அணுகலை வழங்கவும், ராஸ் அல் கோர் முதல் நாத் அல் ஹமர் இண்டர்செக்ஷன் வரை இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கூடுதலாக, கோடைக்காலம் முழுவதும் RTA 10 பள்ளி மண்டலங்களில் சாலை மேம்பாடுகளை நிறைவு செய்தது, அல் வர்கா, அல் சஃபா, அல் பர்ஷா, அல் கர்ஹூத் , அல் மிஷார் மற்றும் அல் குசைஸ் போன்ற பகுதிகளில் 27 பள்ளிகளைச் சுற்றியுள்ள அணுகலை மேம்படுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய கல்வியாண்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வகுப்பறைகளுக்குத் திரும்புவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இந்த காலகட்டத்தில் பொதுவாக நகரம் முழுவதும் போக்குவரத்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT