உலகின் மிக ஆடம்பரமான மால்கள் மற்றும் உயர்நிலை சில்லறை விற்பனை இடங்களுக்கு தாயகமாக விளங்கும் துபாயின் பிரபலமான மால்களில் ஒன்றான நக்கீல் மால் இப்போது பாம் ஜுமேரா மால் என்று மறுபெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த மால் , கடந்த 2019 இல் திறக்கப்பட்டதிலிருந்து ஃபேஷன், உணவு மற்றும் வாழ்க்கை முறை அனுபவங்களுக்கான மையமாக தனித்து நிற்கிறது.
இந்நிலையில் இந்த மறுபெயரிடுதல் அதன் அடையாளத்தைப் புதுப்பிப்பது மட்டுமல்லாமல், உலகத் தரம் வாய்ந்த ஃபேஷன் லேபிள்கள், உள்நாட்டு பிராண்டுகள் மற்றும் புதிய உணவு விற்பனை நிலையங்களைக் கொண்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய பகுதியையும் திறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் உள்ள முன்னணி மால்கள் மற்றும் வாழ்க்கை முறை மையங்களின் போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்கும் துபாய் ஹோல்டிங் அசெட் மேனேஜ்மென்ட் (DHAM) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகளவில் ஷாப்பிங் சொர்க்கம் என்று அழைக்கப்படும் துபாய், அதன் சில்லறை விற்பனை நிலப்பரப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தி துபாய் மால் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் , பாம் ஜுமேரா மால் போன்றவை மூலம் துபாய் நகரம் ஷாப்பிங்கை உணவு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார அனுபவங்களுடன் நிறைந்திருக்கிறது. இங்குள்ள மால்கள் ஷாப்பிங் செய்வதற்கான இடங்களாக மட்டுமின்றி, உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா மற்றும் சில்லறை விற்பனை மையமாக துபாயின் அடையாளத்தை வடிவமைக்கும் வகையில் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel