ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்துள்ள நிலையில், நாட்டின் மிகவும் பிரபலமான குடும்ப பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான குளோபல் வில்லேஜ், அதன் 30வது சீசனுக்கான தேதிகளை அறிவித்துள்ளது, இது அக்டோபர் 15, 2025 முதல் மே 10, 2026 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் சாதனை படைக்கும் 10.5 மில்லியன் பார்வையாளர்களை இந்த பன்முக கலாச்சார பூங்கா வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
என்ன எதிர்பார்க்கலாம்..??
புதிய சீசன் பூங்காவின் சர்வதேச அரங்குகள், உலகளாவிய உணவு வகைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஷாப்பிங், பிரத்யேக சவாரிகள் மற்றும் நேரடி பொழுதுபோக்கு ஆகியவற்றின் தனித்துவமான கலவையை தொடர்ந்து வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பதிப்பில் இடம்பெற்றவை:
- 40,000 நேரடி நிகழ்ச்சிகள்
- 200+ சாப்பாட்டு கடைகள்
- கிட்டத்தட்ட 200 சவாரிகள் மற்றும் இடங்கள்
பூங்காவின் பிரபலமான ஏழு புத்தாண்டு சிறப்பு வாணவேடிக்கைகள் உட்பட வழக்கமான வான வேடிக்கை காட்சிகள் இந்த ஆண்டும் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்கெட் விவரங்கள்
வரவிருக்கும் சீசனுக்கான நுழைவு கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை, இதன் விபரங்கள் அக்டோபரில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில், டிக்கெட்டுகள் 25 திர்ஹம் முதல் 30 திர்ஹம் வரை இருந்தன, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச நுழைவு.
துபாய் க்ரீக்கில் ஒரு சில பெவிலியன்களாக மட்டும் கடந்த 1996 இல் தொடங்கப்பட்ட குளோபல் வில்லேஜ் நாட்டின் அதிகம் பார்வையிடப்பட்ட ஈர்ப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது, கடந்த சீசனில் உலகம் முழுவதிலுமிருந்து கைவினைப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் மரபுகளை காட்சிப்படுத்திய 30 கருப்பொருள் பெவிலியன்கள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு சீசனுக்கும் தயாராவதற்கு கோடை மாதங்களில் குளோபல் வில்லேஜ் மூடப்பட்டிருக்கும். 30வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel