அபுதாபியின் பிக் டிக்கெட் டிராவில் துபாயைச் சேர்ந்த 30 வயது இந்தியர் கிராண்ட் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற நேரடி டிராவின் போது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் பிரசாத் என்ற அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு 15 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் அவர், கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி வாங்கிய டிக்கெட் எண் 200669 வாழ்க்கையை மாற்றும் பெரும் பரிசை பெற்றுத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதன்முதலில் தனது நண்பர்களிடமிருந்து பிக் டிக்கெட்டைப் பற்றி அறிந்துகொண்டதாகவும், கடந்த மூன்று மாதங்களாக டிராவில் பங்கேற்று வரும் 20 நண்பர்கள் கூட்டாக டிக்கெட்டை வாங்கிய நிலையில் ஜாக்பாட் பரிசு கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நற்செய்தி குறித்து தெரிவிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிச்சர்ட் பிரசாத்தை அழைத்தபோது, “என் வாழ்க்கையில் முதல்முறையாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த பரிசுத் தொகை, இந்தியாவில் உள்ள இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியை குறிப்பாக தனது தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரை கவனித்துக் கொள்ளவும் உதவும் என்று பிரசாத் கூறியுள்ளார்.
மற்ற அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள்
கிராண்ட் பரிசு மட்டுமின்றி, செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற டிராவில் தலா திர்ஹம்100,000 பரிசுத்தொகையுடன் ஆறு பேர் வெற்றி பெற்றனர், இதில் இலங்கை, இந்தியா, குவைத், ஜோர்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் அடங்குவர்.
“பிக் வின்” ஸ்பின்-தி-வீல் பிரிவில்:
- ஜோகேந்திர ஜாங்கிர் என்பவர் 140,000 திர்ஹம் பரிசுத்தொகையை வென்றார், அதை அவர் தனது வீட்டுக் கடன் மற்றும் தொண்டு நிறுவனத்திற்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
- மும்பையைச் சேர்ந்த ஜிஜு ஜேக்கப் 130,000 திர்ஹம் பரிசுத்தொகையை வென்றார்.
- கேரளாவைச் சேர்ந்த ஷரத் என்பவர் 130,000 திர்ஹம் பரிசுத்தொகையை வென்றார், அதை அவர் 20 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
- சத்தார் மசீஹா 100,000 திர்ஹம் பரிசுத்தொகையை வென்றார், மேலும் இதனை அமெரிக்காவிற்கு குடும்ப பயணத்தைத் திட்டமிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதே டிராவில், அபுதாபியில் வசிக்கும் இந்தியரான ஷமீம் மூலத்தில் ஹம்சா மூலத்தில் என்பவர் 019706 என்ற டிக்கெட்டுடன் BMW M440i காரை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel