ADVERTISEMENT

இந்தியர்கள் பணம் செலுத்த புதிய வசதி.. கத்தாரில் செயல்பாட்டுக்கு வந்துள்ள UPI பேமெண்ட் முறை..

Published: 25 Sep 2025, 2:06 PM |
Updated: 25 Sep 2025, 2:09 PM |
Posted By: Menaka

கத்தாருக்கு வரும் இந்திய பயணிகள் பணம் செலுத்தும் முறையை எளிதாக்க தற்பொழுது புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது UPI (Unified Payments Interface) முறையை பயன்படுத்தி இந்தியர்கள் கத்தாரில் பணம் செலுத்தலாம். NPCI இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் லிமிடெட் (NIPL) மற்றும் NETSTARS இன் கட்டண தீர்வால் இயக்கப்படும் கத்தார் நேஷனல் பேங்க் (QNB) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மை மூலம் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய அமைப்பு, கத்தார் முழுவதும் உள்ள விற்பனை முனையங்களில் (point of sale terminals) QR குறியீடு அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்த இந்தியர்களை அனுமதிக்கிறது. இதன் மூலம் கத்தாருக்கு வரும் சுற்றுலாவாசிகள் இனி பணம் அல்லது நாணய பரிமாற்றத்தை பெரிதும் நம்பியிருக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர்கள் இப்போது UPI அப்ளிகேஷன் மூலம் நேரடியாக நிகழ்நேரத்தில் பணம் செலுத்த முடியும். இந்த நடவடிக்கை கத்தாருக்கு சர்வதேச பார்வையாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கத்தார் டியூட்டி ஃப்ரீ விற்பனை நிலையங்கள் UPI பணப்பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் முதல் வணிகராக மாறியுள்ளன, எனவே, இந்தியர்கள் இப்போது கத்தார் டியூட்டி ஃப்ரீ விற்பனை நிலையங்களில் UPI ஐப் பயன்படுத்தி தடையின்றி பணம் செலுத்தலாம்.

ADVERTISEMENT

இது பயணிகளுக்கு அவர்கள் கத்தார் வந்த தருணத்திலிருந்து தடையற்ற ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகின்றன. இந்த சேவை கத்தாரில் உள்ள பல விற்பனை நிலையங்களில் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சில்லறை விற்பனை மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து NIPL இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரித்தேஷ் சுக்லா அவர்கள் பேசுகையில், கூட்டாண்மை உண்மையிலேயே ஒன்றோடொன்று இயங்கக்கூடிய உலகளாவிய கட்டண நெட்வொர்க்கை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். “இது மில்லியன் கணக்கான இந்திய பயணிகள் தடையற்ற, பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்ய உதவும், மேலும் பணத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

QNB இன் குழு தலைமை வணிக அதிகாரி யூசெப் மஹ்மூத் அல்-நீமா அவர்கள், UPI அறிமுகம் இந்திய பார்வையாளர்களின் வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கத்தார் தரப்பில், பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதன் மூலமும் வணிகர்களை மேம்படுத்துவதன் மூலமும் கத்தார் பொருளாதாரத்தை ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

NETSTARS தலைமை நிர்வாக அதிகாரி சுயோஷி ரி பேசிய போது, இது உலகளவில் தடையற்ற டிஜிட்டல் கட்டண அனுபவங்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு படியாகும் என்று இந்த மைல்கல்லின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.

UPI இப்போது கத்தாரில் செயலில் இருப்பதால், இந்திய பயணிகள் தங்கள் பயணங்களின் போது மென்மையான, வேகமான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை எதிர்பார்க்கலாம், அதே நேரத்தில் உள்ளூர் வணிகங்கள் பரந்த வாடிக்கையாளர் தளத்தை அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel