ADVERTISEMENT

அமீரகத்தில் வரவிருக்கும் புதிய மால்: ஜிம், நீச்சல் குளம், மருத்துவமனை என சகல வசதிகளும் இருக்கும் என தகவல்…

Published: 8 Sep 2025, 9:58 PM |
Updated: 8 Sep 2025, 9:58 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் இருக்கக்கூடிய அல் அய்னுக்கு விரைவில் ஒரு புதிய ஷாப்பிங்கிற்கான பிரத்யேக இலக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல் அய்ன் சிட்டி முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிக்கையில், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அல் குவாவில் புதிதாக அல் வாடி கமெர்ஷியல் காம்ப்ளக்ஸ் (Al Wadi Commercial Complex) திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சுமார் 3,900 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாலில், கடைகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மட்டுமின்றி மருத்துவ சேவை வழங்கும் கிளினிக்கும் இடம்பெறும் என்று முனிசிபாலிட்டி அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த மாலில் ஷாப்பிங் அனுபவம் மட்டுமின்றி அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கக் கூடிய வகையில் கூடுதல் அம்சங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு அடித்தளம் மற்றும் இரண்டு தளங்களைக் கொண்டிருக்கும் அல் வாடி கமெர்ஷியல் காம்ப்ளக்ஸில் பின்வரும் அம்சங்கள் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது:

ADVERTISEMENT
  • சில்லறை விற்பனை: சில்லறை விற்பனை இடங்களைப் பொறுத்தவரை, இந்த கட்டிடத்தில் கடைகள், வீட்டுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான கியோஸ்க்குகள் மற்றும் ஒரு புதுமையான கண்காட்சி பகுதி இருக்கும்.
  • குடும்ப பொழுதுபோக்கு: ஒரு பிரத்யேக குழந்தைகள் விளையாட்டுப் பகுதி.
  • சுகாதாரப் பராமரிப்பு: மருத்துவ சேவைகளை வழங்கும் 558 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மருத்துவமனை.
  • உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம்: ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நீச்சல் குளம் வசதிகள் மற்றும் தனித்தனி ஜிம்கள்.
  • வணிக இடங்கள்: முதல் தளத்தில் ஏழு நவீன அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, இவை கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் என்று முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்த புதிய மால் விற்பனை, ஓய்வு, சுகாதாரம் மற்றும் அலுவலக இடங்களை இணைப்பதன் மூலம், அல் குவாவில் சமூக வாழ்க்கைக்கான புதிய மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT