ADVERTISEMENT

அபுதாபியின் முக்கிய சாலையில் பகுதி மூடல் அறிவிப்பு.. வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைத் திட்டமிட அறிவுறுத்தல்!!

Published: 19 Sep 2025, 6:06 PM |
Updated: 19 Sep 2025, 6:06 PM |
Posted By: Menaka

அபுதாபியின் சாதியத் ஐலேண்டை நோக்கிச் செல்லும் ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் சாலை (E12) இந்த வாரயிறுதியில் தற்காலிகமாக மூடப்படுவதாக அபுதாபி மொபிலிட்டி அறிவித்துள்ளது. மேலும், இந்த மூடல்கள் இரண்டு கட்டங்களாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
  • கட்டம் 1: செப்டம்பர் 19, வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணி முதல் செப்டம்பர் 20, 2025 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணி வரை மூன்று இடது பாதைகள் மூடப்படும்.
  • கட்டம் 2: செப்டம்பர் 20, சனிக்கிழமை இரவு 10:00 மணி முதல் செப்டம்பர் 21, 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணி வரை மூன்று வலது பாதைகள் மூடப்படும்.

எனவே, யாஸ் ஐலேண்ட்டுக்கும் சாதியத் ஐலேண்ட்டுக்கும் இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள் சாத்தியமான தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்றும், மாற்று வழிகளைத் திட்டமிடுமாறும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அபுதாபியின் மிகவும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றான ஷேக் கலீஃபா சாலையில் போக்குவரத்து ஓட்டம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டமிடப்பட்ட மேம்படுத்தல்களின் ஒரு பகுதியாக இந்த மூடல் உள்ளது என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel