ADVERTISEMENT

அபுதாபி மற்றும் துபாயைப் போலவே பறக்கும் காரை சோதனை செய்த மற்றுமொரு எமிரேட்!!

Published: 10 Sep 2025, 9:16 PM |
Updated: 10 Sep 2025, 9:16 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இரு எமிரேட்களும் பறக்கும் காரிற்கான சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிந்துள்ள நிலையில் மற்றுமொரு எமிரேட்டும் தற்பொழுது இணைந்துள்ளது. இன்று (புதன்கிழமை), ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளரும் உச்ச கவுன்சிலின் உறுப்பினருமான ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி (Sheikh Saud bin Saqr Al Qasimi) அவர்கள் முன்னிலையில், சீன தொழில்நுட்ப நிறுவனமான XPENG AEROHT ஆல் உருவாக்கப்பட்ட எமிரேட்டின் எலெக்ட்ரிக் பறக்கும் காரின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சோதனை மூலம், அபுதாபி மற்றும் துபாய்க்குப் பிறகு, எதிர்கால இயக்கத்தை நோக்கிய அமீரகத்தின் பந்தயத்தில் ராஸ் அல் கைமா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

ADVERTISEMENT

அல் ஜசிரா ஏவியேஷன் கிளப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமீரகத்திற்கான சீன தூதர் ஜாங் யிமிங் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. எமிரேட்டில் பறக்கும் கார் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம், XPENG AEROHT உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம், சுற்றுலா, பொழுதுபோக்கு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, நிலைத்தன்மை மற்றும் நீண்டகால வளர்ச்சியில் வலுவான கவனம் செலுத்துகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் RAK போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் இன்ஜினியர் இஸ்மாயில் ஹசன் அல் ப்ளூஷி மற்றும் XPENG AEROHT இன் தலைமை நிர்வாக அதிகாரி சாவோ டெலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ADVERTISEMENT

இது குறித்து RAK ஆட்சியாளர் ஷேக் சவுத் பேசுகையில், இந்த வெளியீடு முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் அதே வேளையில், புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கான ராஸ் அல் கைமாவின் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுவதாகக் கூறியுள்ளார். “மின்சார பறக்கும் வாகனத்தின் சோதனை விமானம் ஸ்மார்ட் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தீர்வுகளை உருவாக்குவதற்கான எங்கள் பயணத்தில் ஒரு புதிய படியாகும், இது எங்கள் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட, மீள்தன்மை கொண்ட பொருளாதாரத்திற்கான எங்கள் பார்வையை ஆதரிக்கிறது,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

RAK எமிரேட்டின் இந்த மைல்கல் முயற்சி, இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாய் மற்றும் அபுதாபியில் இதேபோன்ற முன்னேற்றங்களைத் தொடர்ந்து வந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஜோபி ஏவியேஷன் மூலம் துபாய் ஒரு பறக்கும் டாக்ஸியை சோதித்தது, அதே நேரத்தில் அபுதாபி 2026 இல் அதன் வணிக ரீதியான வெளியீட்டிற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஆர்ச்சர் ஏவியேஷனுடன் ஒரு வெற்றிகரமான சோதனையை அறிவித்தது.

ADVERTISEMENT

இப்போது ராஸ் அல் கைமாவுடன், மூன்று முக்கிய எமிரேட்களும் இப்போது நகர்ப்புற விமான இயக்கத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன, இவை அமீரகத்தை எதிர்கால, நிலையான போக்குவரத்திற்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel