நாளை அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் இன்று (செப்டம்பர் 30, செவ்வாய்கிழமை) அக்டோபர் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை அறிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் திருத்தப்பட்ட விலைகள் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது சற்று அதிகரிப்பைக் காட்டுகிறது.
புதிய எரிபொருள் விலைகள் (லிட்டருக்கு)
- சூப்பர் 98 பெட்ரோல்: 2.77 திர்ஹம்ஸ் (செப்டம்பரில் 2.70 திர்ஹம்ஸ் ஆக இருந்தது)
- சிறப்பு 95 பெட்ரோல்: 2.66 திர்ஹம்ஸ் (செப்டம்பரில் 2.58 திர்ஹம்ஸ்)
- E-Plus 91 பெட்ரோல்: 2.58 திர்ஹம்ஸ் (செப்டம்பரில் 2.51 திர்ஹம்ஸ்)
- டீசல்: 2.71 திர்ஹம்ஸ் (செப்டம்பரில் 2.66 திர்ஹம்ஸ் )
எரிபொருள் விலைகள், ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு செப்டம்பரில் சற்று உயர்ந்தன. தற்பொழுது மீண்டும் விலையானது சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகள் பணவீக்கத்தை கணிசமாக பாதிக்கின்றன, ஏனெனில் நிலையான பெட்ரோல் விலைகள் போக்குவரத்து செலவுகள் மற்றும் பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் உலகளவில் பெட்ரோல் விலை குறைவாக உள்ள 25 நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel