ADVERTISEMENT

UAE தொழிலாளர் சட்டம்: ஊழியர்கள் நோட்டீஸ் பீரியட் வழங்காமல் வேலையை விட்டு வெளியேறலாமா?

Published: 26 Sep 2025, 5:30 PM |
Updated: 26 Sep 2025, 5:31 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்கள் தங்கள் முதலாளி சம்பளம் செலுத்தாதது போன்ற ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறினால், அறிவிப்பு காலம் (notice period) இல்லாமல் சட்டப்பூர்வமாக வேலையை ராஜினாமா செய்யலாம். அதுமட்டுமின்றி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தொழிலாளர்கள் தங்கள் முழு சேவை முடிவு சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்ளவும் உரிமை உண்டு.

ADVERTISEMENT

இருப்பினும், குறைந்தபட்சம் வேலையை விட்டு வெளியேறுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்திடம் (MoHRE) பிரச்சினை குறித்து அறிவிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கோருகிறது. இதையடுத்து, மீறலை சரிசெய்ய அமைச்சகம் முதலாளிக்கு உத்தரவிடும். அப்போதும் முதலாளி இணங்கத் தவறினால், அறிவிப்பின்றி (notice period) வேலையை ராஜினாமா செய்வதற்கான ஊழியரின் முடிவு செல்லுபடியாகும் என்று கருதப்படுகிறது.

ஆனால், ஒரு ஊழியர் அமைச்சகத்திற்குத் தெரிவிக்காமல் ராஜினாமா செய்தால், வழக்கமான நோட்டீஸ் பீரியடிற்கான விதிகள் பொருந்தும். அதாவது, தொழிலாளி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு காலத்தை முடிக்க வேண்டும் அல்லது முழு அறிவிப்பு காலத்திற்கு அல்லது அதன் மீதமுள்ள பகுதிக்கு அவர்களின் ஊதியத்திற்கு சமமான தொகையை முதலாளிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

முதலாளிக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படாவிட்டாலும் கூட, “Notice period allowance” என்று அழைக்கப்படும் அறிவிப்பை வழங்கத் தவறியதற்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் தெளிவுபடுத்துகிறது. எனவே, சட்டம் ஊழியர்களை நியாயமற்ற நடைமுறைகளிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், முன்னறிவிப்பின்றி வேலையை விட்டுச் செல்வதற்கு முன் சரியான நடைமுறைகளைப் பின்பற்றவும் அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT