துபாயின் மிகவும் பிரபலமான பருவகால இடங்களில் ஒன்றான துபாய் மிராக்கிள் கார்டன் (Dubai Miracle Garden) அதன் 14வது சீசனுக்காக நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்களை 50 க்கும் மேற்பட்ட கருப்பொருள் வடிவமைப்புகளில் காட்சிப்படுத்தும் இந்த பொழுதுபோக்கு இடம், இந்த சீசனுக்கான டிக்கெட்டுகளில் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் இப்போது 30 சதவீத தள்ளுபடியை அனுபவிக்க முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதாவது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டினருக்கான நுழைவுக் கட்டணம் 105 திர்ஹம்ஸ் என்ற நிலையான விலையில் இருந்தாலும், குடியிருப்பாளர்கள் தங்களின் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியை சமர்ப்பித்து 73.5 திர்ஹம்ஸ்க்கு டிக்கெட்டுகளை வாங்கலாம்என கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான குறைக்கப்பட்ட விலைகள்
இது தொடர்பாக மிராக்கிள் கார்டன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஜாஹர் ஹம்மாதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சீசனில் குழந்தைகளுக்கான டிக்கெட் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அதன்படி 3 முதல் 13 வயது வரையிலான குழந்தைகள்: 80 திர்ஹம்ஸ் (கடந்த ஆண்டு 85 திர்ஹம்ஸ் ஆக இருந்தது)
- எமிரேட்ஸ் ஐடி உள்ள குழந்தைகள்: 52.5 திர்ஹம்ஸ்
- 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: இலவசம்
- மாற்றுத்திறனாளிகள்: இலவச நுழைவு
- மாற்றுத்திறனாளிகளின் தோழர்கள்: 50 திர்ஹம்ஸ் சிறப்பு கட்டணம்
இலவச நுழைவு
நடப்பு சீசனில் தள்ளுபடி மட்டுமின்றி இலவச நுழைவையும் அனுபவிக்கலாம். ஆம், தங்கள் பிறந்தநாளில் மிராக்கிள் கார்டனுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் ஐடியைக் காட்டி இலவச அனுமதியைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஒவ்வொரு பார்வையாளருக்கு கார்டன் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ள புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட தொழில்முறையாக பிரிண்ட் செய்யப்பட்ட படம் கிடைக்கும். பச்சை நிற டி-சர்ட்களில் உள்ள புகைப்படக் கலைஞர்கள், நியமிக்கப்பட்ட இடங்களில் தங்கள் இலவச படத்தை மீட்டெடுக்க பார்வையாளர்களுக்கு ஒரு குறியீட்டை (code) வழங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்
அல் பர்ஷா சவுத் 3 இல் அமைந்துள்ள துபாய் மிராக்கிள் கார்டன் பார்வையாளர்களை பின்வரும் நேர அட்டவணைப்படி வரவேற்கிறது:
- வார நாட்கள்: காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை
- வார இறுதி நாட்கள்: காலை 9 மணி முதல் 12 மணி வரை
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel