ADVERTISEMENT

துபாயில் வெவ்வேறு நிறங்களில் காணப்படும் டாக்ஸி ரூஃப்கள்.. அதற்கான காரணங்கள் என்ன..??

Published: 1 Sep 2025, 4:43 PM |
Updated: 1 Sep 2025, 4:47 PM |
Posted By: Menaka

துபாய் டாக்ஸிகள் எமிரேட்டில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து முறைகளில் ஒன்றாகும். எமிரேட் முழுவதும் ஆயிரக்கணக்கான டாக்ஸிகள் தினமும் இயக்கப்படுவதால், அவை குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நகரத்தைச் சுற்றி வருவதற்கு வசதியான, நம்பகமான மற்றும் மலிவு வழி போக்குவரத்தை வழங்குகின்றன. வேலைக்குச் செல்வது, ஷாப்பிங் செய்வது அல்லது விமான நிலையத்திற்குச் செல்வது என எதுவாக இருந்தாலும், டாக்ஸிகள் துபாயில் அடிக்கடி தேர்ந்தெடுக்கப்படும் போக்குவரத்து விருப்பங்களில் ஒன்றாகவே உள்ளன.

ADVERTISEMENT

இவ்வாறு துபாய் முழுவதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான டாக்ஸிகளின் ‘roof’ எனப்படும் மேற்கூரைகள் வெவ்வேறு வண்ணங்களில் இருப்பதை கவனித்திருப்பீர்கள். துபாய் சாலையில் 12,000 க்கும் மேற்பட்ட டாக்ஸிகள் இருக்கின்றன, அதில் ரூஃப் நிறங்கள் எதைக் குறிக்கின்றன? ஒவ்வொரு நிறத்தின் பின்னணியிலும் தனித்துவமான அர்த்தங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

ரூஃப்கள் ஏன் வெவ்வேறு வண்ணங்களில் உள்ளன?

பல ஆண்டுகளுக்கு முன்பு, துபாய் டாக்ஸிகள் தனித்தனி தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதால் ஒவ்வொரு நிறுவன டாக்ஸியும் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தன. சீரான தோற்றத்தை உருவாக்க, RTA (சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்) அனைத்து டாக்ஸிகளைம் ஒரே நிறத்தில் மாற்ற முடிவு செய்தது, எனவே, கூரை நிறம் மட்டுமே அவை சேர்ந்த நிறுவனத்தைக் குறிக்கும்.

ADVERTISEMENT

இன்று, அனைத்து டாக்சிகளும் ஒரே கட்டண முறையைப் பின்பற்றுகின்றன, எனவே நீங்கள் எந்த நிற டாக்ஸியை எடுத்தாலும் விலை ஒன்றுதான். கூரை நிறம் எந்த நிறுவனம் காரை இயக்குகிறது என்பதை மட்டுமே உங்களுக்குச் சொல்கிறது.

ஒவ்வொரு நிறத்திற்கும் என்ன அர்த்தம்

  • ரெட் ரூஃப்: துபாய் டாக்ஸி நிறுவனம் (Dubai Taxi Company) – துபாயில் உள்ள மிகப்பெரிய டாக்ஸி நிறுவனம் இதுதான், RTA ஆல் நடத்தப்படுகிறது. DTC செயலி அல்லது 800 88088 அல்லது Careem மூலம் முன்பதிவு செய்யலாம்.
  • ப்ளூ ரூஃப்: துபாயில் டாக்சிகளை இயக்கும் முதல் உரிமை பெற்ற நிறுவனமான Kabi (முன்னர் Cars Taxi) – இது ப்ளூ ரூஃப் டாக்சிகளை இயக்கி வந்தது. தற்பொழுது இதனை படிப்படியாக நீக்கி, அவற்றை பர்பிள் ரூஃப் டாக்சிகளாக மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.
  • பர்ப்பிள் ரூஃப் (purple-roof): Kabi – துபாயில் பர்பிள் ரூஃப் என்று குறிப்பிடப்படும் இந்த டாக்ஸிகள் முழுமையாக ஹைப்ரிட் ஆகும். அத்துடன் புதுமை மற்றும் நவீன வடிவமைப்பைக் குறிக்கிறது. நீங்கள் இதில் முன்பதிவு செய்ய விரும்பினால், 04 269 3344 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது கரீம் அப்ளிகேஷனை பயன்படுத்தி முன்பதிவு செய்யவும்.
  • கிரீன் ரூஃப்: அரேபியா டாக்ஸி – RTA உடன் இணைந்து பணியாற்றும் இந்த நிறுவனம், மென்மையான சேவையை வழங்க சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைப்ரிட் வாகனங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், 04 285 1111 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது கரீம் அப்ளிகேஷனை பயன்படுத்தி முன்பதிவு செய்யவும்.
  • யெல்லோ ரூஃப்: நேஷனல் டாக்ஸி – 2000 முதல் துபாய் மற்றும் அபுதாபியில் இயங்குகிறது, இப்போது 1,700+ டாக்சிகளுடன் சேவை செய்கிறது. இதனை முன்பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் 04339 0002 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது கரீம் செயலியில் முன்பதிவு செய்யலாம்.
  • ஆரஞ்சு ரூஃப்: மெட்ரோ டாக்ஸி – மற்ற டாக்ஸிகளை போல ஆரஞ்சு ரூஃப் கொண்ட டாக்ஸிகளை நீங்கள் அடிக்கடி பார்க்க முடியாது. ஆனால் இது RTA நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். நீங்கள் இந்த டாக்ஸியை முன்பதிவு செய்ய விரும்பினால், 04 267 3222 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது கரீம் செயலி வழியாக முன்பதிவு செய்யவும்.
  • பிங்க் ரூஃப்: பெண்களுக்கான டாக்ஸி – பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கென பிரத்யேகமாக இயக்கப்படுகிறது, அத்துடன் கூடுதல் பாதுகாப்பிற்காக பெண் ஓட்டுநர்களுடன் இயக்கப்படுகிறது. 800 88088 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது DTC அப்ளிகேஷன் வழியாகவோ முன்பதிவு செய்யலாம்.

ஹலா டாக்ஸி என்றால் என்ன?

ஹலா டாக்ஸி என்பது ஒரு தனி வகை டாக்ஸிஅல்ல, இது கரீம் செயலியில் உள்ள முன்பதிவு சேவையாகும், இது டாக்ஸியின் ரூஃப் நிறத்தைப் பொருட்படுத்தாமல் எந்த RTA டாக்ஸியையும் பதிவு செய்ய உங்களை அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel