வானுயர் கட்டிடங்களுக்கு புகழ்பெற்ற துபாய், விரைவில் உலகின் மிக உயரமான ஹோட்டலாக மாறவிருக்கும் ‘சீல் துபாய் மெரினா’ (Ciel Dubai Marina) என்ற வானுயர் கட்டிடத்தை வரவேற்க உள்ளது, நகரத்தில் ஆடம்பர விருந்தோம்பலின் புதிய சகாப்தமாக வரவிருக்கும் இந்த உயரமான ஹோட்டல், வருகின்ற நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘Norr’ என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம், 377 மீட்டர் உயரம் மற்றும் 82 தளங்களைக் கொண்டிருக்கும் என்றும், ‘Vignette Collection by IHG Hotels & Resorts’இன் கீழ், தி ஃபர்ஸ்ட் குரூப் ஹாஸ்பிடாலிட்டியால் நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கெவோரா ஹோட்டலை விஞ்சி உலகளாவிய சாதனையைப் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டிடத்தில் இடம்பெறும் சிறப்பு அம்சங்கள்
இந்த கட்டிடத்தில் 1,004 அறைகள் மற்றும் சூட்கள் இருக்கும், இவை அனைத்தும் தரை முதல் ரூஃப் வரையிலான ஜன்னல்களுடன் பாம் ஜுமேரா மற்றும் அரேபிய வளைகுடா ஆகியவற்றின் பரந்த காட்சிகளை வழங்கும். மேலும், விருந்தினர்கள் பின்வருவனவற்றையும் அனுபவிக்கலாம்:
- உலகின் மிக உயரமான இன்ஃபினிட்டி ஸ்விம்மிங் பூல்- (76வது மாடி)
- 61வது மாடியில் ஒரு சொகுசு ஸ்பா
- 24/7 என இயங்கும் அதிநவீன ஜிம்
- துபாய் மெரினாவின் உணவு, ஷாப்பிங் மற்றும் அதன் வாட்டர் டாக்சிகள் மூலம் கடற்கரைகளுக்கு நேரடி அணுகல்
- எட்டு தனித்துவமான இடங்கள் கொண்ட உணவு அனுபவம் ஒரு முக்கிய ஈர்ப்பாக இருக்கும்.
இது குறித்து தி ஃபர்ஸ்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராப் பர்ன்ஸ் கூறுகையில், “சுற்றுலா மற்றும் வணிக பயணத்திற்கான உலகளாவிய மையமாக துபாயின் நிலையை வலுப்படுத்தும் ஒரு மைல்கல் வளர்ச்சியை சீல் துபாய் மெரினா பிரதிநிதித்துவப்படுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
துபாய் மெரினாவின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், மெரினா போர்டுவாக், வாட்டர் டாக்சிகள், துபாய் மெரினா மால், டிராம் மற்றும் மெட்ரோ இணைப்புகளுடன் நேரடியாக இணைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருந்தினர்கள் பாம் ஜுமேராவில் உள்ள சோலுனா பீச் கிளப்க்கு பிரத்யேக அணுகலை அனுபவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் சீல் துபாய் மெரினா, அதன் சாதனை படைத்த வடிவமைப்பு, விதிவிலக்கான உணவு மற்றும் சிறந்த இருப்பிடத்துடன், ஆடம்பர வாழ்க்கையின் உலகளாவிய சின்னமாகவும், துபாயின் வானலையின் புதிய மையமாகவும் மாற உள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel