குடியிருப்பாளர்களின் திருப்தி மற்றும் வாழ்க்கைத் தரத்தை அளவிடும் சமீபத்திய டைம் அவுட் இன்டெக்ஸ் ஆய்வறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நகரமாக அபுதாபி முடிசூட்டப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய பட்டியலில் துபாயும் இடம்பிடித்துள்ளது, இது உலகின் 20 மகிழ்ச்சியான நகரங்களில் 16வது இடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டைம் அவுட் 2025 இன்டெக்ஸ் கணக்கெடுப்பில் குடியிருப்பாளர்களிடமிருந்து நேர்மறையான கருத்து, சமூக உணர்வு, வாழ்க்கைத் தரம் மற்றும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் அடிப்படையில் நகரங்களை தரவரிசைப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில் அமீரக தலைநகரான அபுதாபி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து மெடலின், கேப் டவுன் மற்றும் மெக்ஸிகோ நகரம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன. இந்தியாவின் முக்கிய நகரமான மும்பை மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் முறையே ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தைப் பிடித்தன. முதல் பத்து இடங்களில் சிகாகோ, செவில்லே, மற்றும் மெல்போர்ன் ஆகியவை அடங்கும்.
முதல் 20 இடங்களில் உள்ள மற்ற நகரங்களில் பிரைட்டன், போர்டோ, சிட்னி, சியாங் மாய், மற்றும் மராகேஷ் ஆகியவை அடங்கும், துபாய் 16 வது இடத்தையும், ஹனோய், ஜகார்த்தா, வலென்சியா மற்றும் கிளாஸ்கோ ஆகியவை முதல் 20 இடங்களையும் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்களின் நகரம் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறதா, அன்றாட வாழ்க்கையில் அவர்கள் காணும் மகிழ்ச்சி, மற்றும் சமீபத்திய காலங்களில் ஒட்டுமொத்த மகிழ்ச்சியின் உணர்வு வளர்ந்துள்ளது என்று அவர்கள் நம்புகிறார்களா என்பது உள்ளிட்ட அவர்களின் மகிழ்ச்சி பற்றிய ஐந்து முக்கிய அறிக்கைகளுக்கு குடியிருப்பாளர்கள் அளித்த பதில்களால் தரவரிசை தீர்மானிக்கப்பட்டதாக டைம் அவுட் தெரிவித்துள்ளது.
இந்த முடிவுகள் நவீன வாழ்க்கை, கலாச்சார மற்றும் வலுவான சமூக உணர்வை சமநிலைப்படுத்தும் நகரங்களில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு எவ்வாறு செழித்து வளர்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel