ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், வளைகுடா நாடுகள் முழுவதும் உள்ள இந்தியர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு சிறப்பு பண்டிகை சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, பயணிகள் இப்போது இந்தியாவிற்கு பயணிக்கும்போது வெறும் 1 திர்ஹம் கட்டணத்தில் 10 கிலோ கூடுதல் லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை நவம்பர் 30, 2025 வரையிலான பயணங்களுக்கு அக்டோபர் 31, 2025 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் ஓணம் போன்ற கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பண்டிகை பயணத்தை மிகவும் மலிவு விலையிலும் தொந்தரவு இல்லாததாகவும் மாற்றுவதே இந்த ப்ரோமோஷனின் நோக்கமாகும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சலுகைகள் விவரங்கள்
- தகுதியுள்ள வழித்தடங்கள்: ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஓமன், பஹ்ரைன் மற்றும் கத்தார் உட்பட அனைத்து வளைகுடா நாடுகளிலிருந்தும் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
- பயணிகள் இந்த சலுகையை முன்பதிவு செய்யும் நேரத்தில் மட்டுமே பெறலாம், டிக்கெட் வழங்கப்பட்ட பிறகு அதை பின்னர் சேர்க்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து வளைகுடா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய மேலாளர் PP சிங் அவர்கள் பேசுகையில், “இந்த 1 திர்ஹம்ஸ் கூடுதல் லக்கேஜ் சலுகையுடன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வளைகுடா முழுவதும் உள்ள எங்கள் விசுவாசமான பயணிகளுக்கு மதிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டைத் தொடர்கிறது. பண்டிகை பயணம் என்பது பெரும்பாலும் அன்பானவர்களுக்கு பரிசுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதைக் குறிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் இந்தச் சலுகை அந்தப் பயணத்தை கொஞ்சம் இலகுவாக்குவதற்கான எங்கள் வழியாகும், ”என்று தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமும் டாடா குழுமத்தின் ஒரு பகுதியுமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், துபாய், ஷார்ஜா, அபுதாபி, மஸ்கட், தம்மம் மற்றும் தோஹா போன்ற வளைகுடா நகரங்களை இணைக்கும் விமானங்களை இந்தியாவில் 20 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இயக்குகிறது.
பண்டிகை காலத்தில் பயணத் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த 1 திர்ஹம்ஸ் லக்கேஜ் சலுகை, இந்தியாவிற்கு செல்லும் போது அதிகமாக எடுத்துச் செல்ல விரும்பும் பயணிகளிடமிருந்து வலுவான ஆர்வத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel