ADVERTISEMENT

துபாய்: கடையில் 660,000 திர்ஹம்ஸை திருடி தப்பி செல்ல முயன்ற நபர்களை ஏர்போர்ட்டில் கையும் களவுமாக பிடித்து போலீஸ்..

Published: 27 Oct 2025, 5:26 PM |
Updated: 27 Oct 2025, 5:26 PM |
Posted By: Menaka

பர் துபாய் காவல்துறை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து சுமார் 660,000 திர்ஹம்ஸ் பணத்த திருடி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற முகமூடி அணிந்த இரண்டு நபர்களை புகார் கிடைத்த இரண்டு மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டு கைது செய்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் விமானத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

பர் துபாய் காவல் நிலைய அறிக்கையின் படி, சந்தேகத்திற்குரிய நபர்கள் இரவில் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டை குறிவைத்து கொள்ளையடிக்க கவனமாக திட்டமிட்டிருந்தனர் என்றும் பின் நுழைவாயில் வழியாக சென்ற அவர்கள் கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தி கடையின் கதவை உடைத்து வளாகத்திற்குள் நுழைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. பின்னர், அவர்கள் அங்கிருந்த பணப்பெட்டிகளை உடைத்து அங்கிருந்த 660,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் அதிகாலையில் ஒரு ஊழியர் திறக்கும் நேரத்திற்கு முன்பு வந்து பணம் திருடு போனதைக் கண்டுபிடித்தபோது இந்த குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து, அதிகாரி, தடயவியல் நிபுணர்கள் மற்றும் சிஐடி புலனாய்வாளர்கள் அடங்கிய விரைவு-பதில் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதாரங்களை மதிப்பாய்வு செய்துள்ளது. மேலும், சந்தேக நபர்கள் முகமூடிகளுடன் தங்கள் அடையாளங்களை மறைக்க முயற்சித்த போதிலும், அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவு கருவிகள், தரவு பகுப்பாய்வு மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, அவர்களை விரைவாக அடையாளம் கண்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

மேலும் விசாரணைகளில், திருடப்பட்ட பணத்துடன் அந்த நபர்கள் அமீரகத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்தது தெரியவந்தது. பர் துபாய் காவல் நிலையம் மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு பொதுத் துறை ஆகியவற்றுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைப்பு மூலம், சந்தேக நபர்கள் இருவரும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் மற்றும் திருடப்பட்ட முழுத் தொகையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட இருவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொது வழக்குரைஞரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel