ADVERTISEMENT

டாக்ஸிகள் முதல் அப்ராக்கள் வரை டிரைவர் இல்லாத போக்குவரத்து முறையில் இறங்கும் துபாய்!!

Published: 1 Oct 2025, 9:36 PM |
Updated: 1 Oct 2025, 9:37 PM |
Posted By: Menaka

உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத மெட்ரோவிலிருந்து சோதனைக்கு உட்படுத்தப்படும் ஸ்மார்ட் டாக்ஸிகள் வரை, துபாய் எப்போதும் போக்குவரத்து கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் இப்போது, ​​நகரில் புதிதாக 15 கிலோமீட்டர் நீளமுள்ள ‘Dubai Autonomous Zone (DAZ)’ திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் நகரம் ஒரு முக்கிய படியை போக்குவரத்து துறையில் எடுத்து வைத்துள்ளது, அங்கு மக்கள் விரைவில் நிலத்திலும் நீரிலும் டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி வாகனங்களைப் பயன்படுத்தி தடையின்றி செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஏற்பாடு செய்த துபாய் உலக மாநாடு மற்றும் ‘Challenge for Self-Driving Transport’ நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் 25% போக்குவரத்தை ஸ்மார்ட் மற்றும் ஓட்டுநர் இல்லாததாக மாற்றும் துபாயின் லட்சிய இலக்குடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது.

துபாய் ஆட்டோனமஸ் மண்டலம் என்றால் என்ன?

துபாய் ஆடோனோமஸ் மண்டலம் என்பது முழுக்க முழுக்க டிரைவர் இல்லா தானியங்கி வாகனங்கள் மட்டும் இயங்கக்கூடிய ஒரு பிரத்யேக பகுதியாகும். RTA -வின் போக்குவரத்து அமைப்புகளின் இயக்குனர் கலீத் அல் அவாதி, ஏழு வெவ்வேறு தானியங்கி போக்குவரத்து முறைகள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதைக் காட்டும் ஒரு “மாதிரி பகுதி” என்று DAZ-ஐ விவரித்துள்ளார். இந்த புதிய DAZ, அல் ஜடாஃபில் உள்ள துபாய் மெட்ரோவின் கிரீன் லைனில் உள்ள க்ரீக் நிலையத்தைச் சுற்றி அமைந்திருக்கும், இது துபாய் க்ரீக் ஹார்பர் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி வரை நீண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

RTAவின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது பஹ்ரோஸ்யானின் கூற்றுப்படி, DAZ மண்டலம், க்ரீக் நிலையம், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மற்றும் துபாய் க்ரீக் ஹார்பர் உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைக்கும். “நீங்கள் மெட்ரோவில் செல்லலாம், தானியங்கு அப்ராவில் ஏறலாம், பின்னர் உங்கள் இறுதி இலக்கை அடைய ஒரு செல்ஃப் டிரைவிங் ஷட்டில் பேருந்தில் ஏறலாம். சாலையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் வாகனம் கூட ஓட்டுநர் இல்லாத தானியங்கு வாகனமாக இருக்கும்” என்று பஹ்ரோஸ்யான் விளக்கியுள்ளார்.

ஏழு ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து முறைகள்

RTA அதிகாரிகளின் கூற்றுப்படி, DAZ ஏழு தானியங்கி போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் என கூறப்பட்டுள்ளது. அவை:

ADVERTISEMENT
  • துபாய் மெட்ரோ (ஓட்டுநர் இல்லாத ரயில்கள்)
  • ரோபோடாக்சிகள்
  • ரோபோபஸ்கள்
  • செல்ஃப் டிரைவிங் ஷட்டில்கள்
  • தானியங்கி அப்ராக்கள் (நீர் டாக்சிகள்)
  • ஓட்டுநர் இல்லாத லாஜிஸ்டிக்ஸ் வாகனங்கள்
  • தானியங்கு துப்புரவு வாகனங்கள் (துபாய் நகராட்சியால் இயக்கப்படுகிறது)

காலவரிசை மற்றும் வெளியீடு

  • 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு: DAZ-க்குள் பொதுமக்களுக்குக் கிடைக்கும் முதல் சேவையாக ரோபோடாக்சிகள் இருக்கும்.
    2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்: ஏழு ஓட்டுநர் இல்லாத முறைகளும் முழுமையாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2027 க்கு அப்பால்: DAZ மாதிரி துபாயின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும்.

Pony.ai, WeRide, மற்றும் Apollo Go (Baidu) ஆகிய மூன்று உலகளாவிய நிறுவனங்கள் ஏற்கனவே துபாயில் ஓட்டுநர் இல்லாத டாக்ஸிகளை சோதித்து வருகின்றன, அடுத்த ஆண்டு வணிக சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இப்போது DAZ உடன், துபாய் எமிரேட் ஓட்டுநர் இல்லாத எதிர்காலத்தை நோக்கி ஒரு பெரிய படியை எடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel