ADVERTISEMENT

துபாயில் பணம் செலுத்த முடியாத எவருக்கும் இலவசமாக உணவளிக்கும் உணவகம்..!!

Published: 10 Oct 2025, 10:24 AM |
Updated: 10 Oct 2025, 11:48 AM |
Posted By: Menaka

ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் தங்கள் குடும்பங்களை ஆதரிக்க அயராது உழைத்து வரும் துபாயில், அவர்கள் அமைதியாக தங்கள் சொந்த விருப்பங்கள் மற்றும் வசதிகளை தியாகம் செய்கிறார்கள். பெரும்பாலும் நல்ல உணவைத் தவிர்க்கிறார்கள் அல்லது குடும்பத்திற்காக கொஞ்சம் சேமிக்க தங்கள் பட்ஜெட்டை இறுக்குகிறார்கள். இந்த அமைதியான போராட்டங்களுக்கு மத்தியில், துபாயின் மிர்திஃப் கம்யூனிட்டியில் உள்ள ஒரு சிறிய உணவகம் அவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜோர்டானிய வெளிநாட்டவருக்குச் சொந்தமான ‘Al Afandi Butchery and Grills’ என்ற சிறிய உணவகம் தேவைப்படும் எவருக்கும் இலவச உணவை வழங்கி வருகிறது. யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்ற எளிய ஆனால் சக்திவாய்ந்த நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் இந்த கடையில் நாடு, பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், பணம் செலுத்த முடியாத எவரும் கடைக்குள் சென்று தங்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.

உரிமையாளர் இது பற்றி விளக்குகையில், “இந்த முயற்சி தொண்டு செய்வது மட்டுமல்ல, இது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி சொல்லும் ஒரு மனமார்ந்த வழியாகும். அமீரகம் பாதுகாப்பு, இரக்கம் மற்றும் மனிதநேயத்தின் கலங்கரை விளக்கம்” என்று விவரித்துள்ளார். மேலும் “எங்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் மனிதநேயத்திற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி சொல்ல விரும்பினோம். இது திருப்பிக் கொடுப்பதற்கான ஒரு சிறிய வழி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் “கஷ்டப்படும் எவரும் மிர்திஃபில் உள்ள எங்கள் உணவகத்திற்கு வரலாம், அவர்களுக்கு நாங்கள் இலவச உணவை வழங்குவோம்,” என்று உணவகத்தின் நிர்வாகி அபு அப்தோ கூறியுள்ளார். அத்துடன் “நாங்கள் கேள்விகள் கேட்கவோ அல்லது நிபந்தனைகளை விதிக்கவோ மாட்டோம். தேவைப்படுபவர்களை வரவேற்கிறோம்.” என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

உணவகத்திற்கு வெளியே, ஒரு பணிவான செய்தி, இந்த முயற்சியின் உணர்வைப் பிரதிபலிக்கிறது: அதில் எழுதப்பட்டிருப்பதாவது:
“உங்கள் உணவை வாங்க முடியாவிட்டால், அதை இலவசமாக ஆர்டர் செய்யுங்கள் – அது அல்லாஹ்வின் பரிசு” என்பதாகும்.

ADVERTISEMENT

அத்துடன் இங்கு வருபவர்கள் தயக்கமோ வெட்கமோ இல்லாமல் சாப்பிட ஊக்குவிக்கப்படுகிறார்கள். உரிமையாளர் கூறுகையில் “அவர்கள் வெட்கப்படக்கூடாது, அவர்கள் ஒரு சகோதரரின் இடத்திற்கு வருவது போல் உணர வேண்டும். வசதியாகவும் மரியாதையுடனும் சாப்பிட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்று உரிமையாளர் கூறியுள்ளார்.

இரக்கம் மற்றும் சுயமரியாதை மீதான இந்த கவனம் அல் அஃபாண்டி உணவகத்தின் பணியை மிகவும் சிறப்பானதாக்குகிறது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் பரந்த தாராள மனப்பான்மை மற்றும் சகிப்புத்தன்மை கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக கூறப்படுகின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel