துபாயின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றான துபாய் ஃபவுன்டைன் ஐந்து மாத புதுப்பித்தல்களுக்குப் பிறகு, நேற்று (அக்டோபர் 1) மாலை 6:30 மணியளவில், ஒளி, இசை மற்றும் உயரும் நீர் ஜெட்களின் பிரம்மிப்பூட்டும் காட்சிகளால் புர்ஜ் ஏரியை ஒளிரச் செய்தது. உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் பளபளப்பான பின்னணியுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் துபாய் ஃபவுன்டைனின் சில மாத கால கூடலூரில் பின் மீண்டும் அதன் காட்சிகளை காண அங்கு மக்கள் கூடியிருந்ததாகக் கூறப்படுகிறது.
எமிரேட்டின் டெவலப்பர் ஆன Emaar நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட துபாய் ஃபவுன்டைன், இசை, விளக்குகள் மற்றும் தண்ணீரை சரியான நடன அமைப்பில் இணைத்து அதன் புகழ்பெற்ற அழகை மீட்டெடுத்துள்ளது. துபாய் மாலின் அடிவாரத்தில் உள்ள 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட புர்ஜ் ஏரி முழுவதும் நீண்டுள்ள இந்த பவுண்டைன் இரண்டு கால்பந்து மைதானங்களை விட நீளமானது மற்றும் 22,000 கேலன் தண்ணீரை 140 மீட்டர் உயரம் வரை செலுத்தும் திறன் கொண்டது.
இந்த பிரபலமான இலக்கு முதன்முதலாக மே 8, 2009 அன்று அறிமுகமானதிலிருந்து, இது டவுன்டவுன் துபாயின் முக்கிய இடமாக இருந்து வருகிறது, மேலும் அதன் அற்புதமான காட்சிகளால் பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றது மற்றும் நகரத்தின் சிறந்த இலவச சுற்றுலா இடங்களில் ஒன்றாக உள்ளது.
புதுப்பித்தல்களுக்குப் பிறகு புதிதாக என்ன எதிர்பார்க்கலாம்?
இந்த புதுப்பித்தலுக்கு பின் துபாய் பவுண்டைன் ஒரு புதிய தோற்றத்தை அளித்துள்ளது:
- தண்ணீருக்கு அடியில் அற்புதமாக மின்னும் ஒளிரும் நீல நிற டைல்ஸ் தரை.
- நிகழ்ச்சிகளுக்கான மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு.
- ரோபோக்களின் துல்லியமான செயலாக்கம். அவை நீர், விளக்குகள் மற்றும் இசையை ஒத்திசைவில் நடனமாடச் செய்கின்றன.
பார்க்க சிறந்த இடங்கள்
- துபாய் மால் ப்ரோமனேட், சூக் அல் பஹார் மற்றும் புர்ஜ் பார்க்: இலவச திறந்தவெளி காட்சிகளுக்கு ஏற்றது.
- அருகிலுள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்கள்: இரவு உணவோடு நிகழ்ச்சியை அனுபவிக்கலாம்.
- துபாய் ஃபவுண்டன் போர்டுவாக்: இது புர்ஜ் ஏரியின் குறுக்கே 272 மீட்டர் நீண்டுள்ளது.
- துபாய் ஃபவுண்டன் லேக் ரைடு: புர்ஜ் ஏரியின் குறுக்கே ஒரு பாரம்பரிய அப்ராவில் சவாரி செய்தவாறே, மிக நெருக்கமான காட்சியை அனுபவிக்கலாம் (டிக்கெட்டுகள் 73.25 திர்ஹம்ஸ்).
நிகழ்ச்சி நேரங்கள்
- மாலை: மாலை 6 மணி முதல் தினமும் இரவு 11 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும்.
- மதியம்:
- சனி முதல் வியாழன் வரை: மதியம் 1 மணி & மதியம் 1:30 மணி
- வெள்ளிக்கிழமைகள்: பிற்பகல் 2 மணி & மதியம் 2:30 மணி
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel