துபாயின் முதல் பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் அறக்கட்டளையான அல் மால் கேபிடல் REIT (Al Mal Capital REIT) ஆனது, துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க்கில் உள்ள NMC ராயல் மருத்துவமனையின் சொத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன, இது சுகாதாரத் துறையில் அதன் முதல் முதலீட்டைக் குறிக்கிறது.
இது குறித்த அறிக்கைகளில் கையகப்படுத்தல் விலை வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த ஒப்பந்தம் AMCREIT இன் மொத்த போர்ட்ஃபோலியோ மதிப்பை சுமார் 1.4 பில்லியன் திர்ஹம்ஸ் ஆக உயர்த்துகிறது என கூறப்பட்டுள்ளது.
சுமார் 492,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் இரண்டு மருத்துவமனை பகுதிகள், குத்தகைக்கு விடப்பட்ட வணிக கட்டிடம் இருக்கும் என்றும் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 120 உள்நோயாளி படுக்கைகள் மற்றும் விரிவான வெளிநோயாளர் மற்றும் அவசர சேவைகள் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், NMC ஹெல்த்கேர் நீண்ட கால குத்தகையின் கீழ் மருத்துவமனையை மீதமுள்ள 17 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயக்கும், இது முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அல் மால் கேபிடலின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நாசர் அல் நபுல்சி அவர்கள் பேசுகையில், இந்த கையகப்படுத்தல் REIT இன் சொத்துக்களைப் பன்முகப்படுத்துதல் மற்றும் நிலையான, நீண்ட கால வருமானத்தை வழங்குதல் என்ற இலக்கை ஆதரிக்கிறது என்று கூறியுள்ளார்.
பில்லியன் கணக்கான கடனை உள்ளடக்கிய நிதி ஊழலில் சிக்கிய NMC குழுமம் இந்தியாவை சேர்ந்த B.R. ஷெட்டிக்கு சொந்தமானதாகும். அவர் மிகப்பெரிய நிதி ஊழலில் சிக்கியது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவரது சொத்துகள் அனைத்தும் அமீரக அரசால் முடக்கப்பட்ட போது இந்த மருத்துவமனையும் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த 2022 இல் மறுசீரமைக்கப்பட்டு இயங்கி வந்த நிலையில் இப்போது புதிய நிர்வாகத்தின் கீழ் அமீரகத்தின் மிகப்பெரிய தனியார் சுகாதார தளமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel