சர்வதேச பயணிகளுக்கான உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) இந்த வாரம் அதன் 65 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது, ஒரு சாதாரண ஓடுபாதையுடன் தொடங்கி இப்போது உலகளாவிய விமானப் போக்குவரத்து சின்னமாக உருவெடுத்திருக்கிறது என்றால் அது துபாய் விமான நிலையத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.
முதன்முதலில் செப்டம்பர் 30, 1960 அன்று திறக்கப்பட்டபோது, DXB ஒரு சிறிய டெர்மினல் மற்றும் மணல் ஓடுபாதையை மட்டுமே கொண்டிருந்தது. ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு, தற்போது இது 92 சர்வதேச விமான நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பயணிகளைக் கையாளுகிறது, மேலும் மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்க விமான நிலைய கட்டமைப்புகளில் அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது.
குறிப்பாக, மிக சமீபத்தில், விமான நிலையம் அதன் எதிர்கால “ரெட் கார்பெட்” ஸ்மார்ட் காரிடாரை டெர்மினல் 3 இல் அறிமுகப்படுத்தியது இதற்கு சான்றாகும். AI-மூலம் இயங்கும் இந்த அமைப்பு 10 பயணிகள் வரை சில நொடிகளில் இமிக்ரேஷனை முடிக்க அனுமதிக்கிறது.
இவ்வாறு அசுர வளர்ச்சியைக் கண்டு வரும் விமான நிலையம், 65 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த மைல்கல் நிகழ்வை முன்னிட்டு, துபாய் விமான நிலையங்களின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம், விமான நிலையத்தின் குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியைப் பற்றிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
துபாய் விமான நிலையத்தின் வளர்ச்சி
1959 – துபாயின் நகர விளிம்பிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தரிசு பாலைவன நிலத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன.
1960 – DXB மணல் ஓடுபாதை மற்றும் ஒரு டெர்மினலுடன் திறக்கப்படுகின்றது.
1963 – முதல் ஓடுபாதை கட்டப்பட்டு பெரிய விமானங்கள் இயங்க வழி வகுத்தது.
1969 – ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, DXB 20 இடங்களுக்கு பயணிக்கும் ஒன்பது விமான நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது.
1970 – ஒரு புதிய மூன்று மாடி டெர்மினல், கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட விமானநிலைய விளக்குகள் விமான நிலையத்தை மாற்றியமைக்கின்றன.
1983 – துபாய் டியூட்டி ஃப்ரீ செயல்பாடுகளைத் தொடங்குகிறது, அதன் முதல் ஆண்டில் $20 மில்லியன் வருவாயைப் பதிவு செய்கிறது.
1984 – மேம்பட்ட விளக்குகள் மற்றும் தரையிறங்கும் அமைப்புகளுடன் இரண்டாவது ஓடுபாதை திறக்கப்படுகின்றது.
1985 – DXB அதன் சொந்த தளமாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது.
1998 – டெர்மினல் 2 திறக்கப்பட்டு, இரண்டு மில்லியன் பயணிகளாக திறனை அதிகரிக்கிறது.
2000 – Concourse 1 (தற்போது Concourse C) 2 பில்லியன் திர்ஹம்ஸ் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அறிமுகமாகிறது.
2008 – எமிரேட்ஸிற்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட டெர்மினல் 3, 30 மில்லியன் பயணிகளின் திறனுடன் திறக்கப்படுகிறது.
2009 – DXB 40 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கையைக் கடந்து, உலகின் சிறந்த 50 விமான நிலையங்களில் வேகமாக வளர்ந்து வரும் மையமாக மாறியுள்ளது. அதே ஆண்டு, ஃப்ளைதுபாய் விமான சேவை தொடங்கப்பட்டது.
2013 – உலகின் மிகப்பெரிய A380-க்கு அர்ப்பணிக்கப்பட்ட வசதியான Concourse A, செயல்பாடுகளைத் தொடங்குகிறது.
2014 – DXB சர்வதேச பயணிகளுக்கான உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக முடிசூட்டப்பட்டுள்ளது.
2016 – Concourse D டெர்மினல் 1 இல் திறக்கப்படுகிறது, 60 க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது.
2018 – விமான நிலையம் அதன் ஒரு பில்லியன் பயணிகளை வரவேற்கிறது.
2020 – கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், DXB தனது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது, ஆனால் ஜூலை 7 அன்று விரைவாக மீண்டும் திறக்கிறது, இது உலகளவில் முதல் முக்கிய மையங்களில் ஒன்றாகும்.
2023 – சர்வதேச விமான நிலைய கவுன்சிலிடமிருந்து அணுகல் மற்றும் உள்ளடக்கத்திற்கான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது.
2025 – AI- மூலம் இயங்கும் இமிகிரேஷன் ஸ்மார்ட் காரிடாரை அறிமுகப்படுத்துகிறது; தொடர்ந்து 11வது ஆண்டாக உலகின் பரபரப்பான விமான நிலையமாக அதன் நிலையைத் தொடர்கிறது.
Happy 65th anniversary to us 🥳
— DXB (@DXB) September 30, 2025
Here's to the next 65 years of connecting you to the world through the world's best city, #Dubai 🛫🌍@DXBMediaOffice @erthdubai @DubaiAirports pic.twitter.com/BBTbM818cb
அதன் ஆரம்ப நாட்களில் DC-3 விமானங்களை இடமளிப்பதில் இருந்து ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பயணிகளைக் கையாள்வது வரை, துபாய் சர்வதேச விமான நிலையம் உலகளாவிய இணைப்புக்கான எமிரேட்டின் தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியது. ஷேக் அகமது குறிப்பிட்டது போல, DXB இன் வெற்றி அதன் உள்கட்டமைப்பில் மட்டுமல்ல, உலகளாவிய விமானப் போக்குவரத்தை எதிர்காலத்தில் மாற்றியமைக்கும், புதுமைப்படுத்தும் மற்றும் வழிநடத்தும் திறனில் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel