துபாயில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முறையாக துபாயில் தங்கத்தின் விலை கிராமுக்கு 500 திர்ஹம்ஸைத் தாண்டியுள்ளது, இது உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் நகை பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வளர்ந்து வரும் ஆர்வத்தை பிரதிபலிக்கும் ஒரு மைல்கல் என்று கூறப்படுகிறது.
‘Dubai Jewellery Group’ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, செவ்வாய்க்கிழமை காலை 24 காரட் வகை தங்கம் கிராமுக்கு 502.5 திர்ஹம்ஸ்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது, இது திங்கட்கிழமை விலையிலிருந்து 9.25 திர்ஹம்ஸ் அதிகரித்துள்ளது. இதேபோல், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 8.5 திர்ஹம்ஸ் உயர்ந்து, 456.75 திர்ஹம்ஸிலிருந்து 465.25 திர்ஹம்ஸ் ஆக உயர்ந்துள்ளது.
பின்னர், 24 காரட் மற்றும்22 காரட் வகை தங்கத்தின் விலைகள் முறையே 497.0 திர்ஹம்ஸ் ஆகவும், 460.25 திர்ஹம்ஸ் ஆகவும் சற்று சரிந்ததாக கூறப்படுகின்றது.
உலகளவில் தங்கம் ஒரு அவுன்ஸ்க்கு 4,179.6 டாலரை எட்டியது, பின்னர் 4,105.66 டாலரில் நிலைபெற்றது, அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு, பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் நடந்து வரும் அமெரிக்க-சீனா வர்த்தக பதட்டங்கள் போன்றவையே இந்த உயர்வுக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டாலும், தங்கம் மற்றும் வெள்ளிக்கான ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு நேர்மறையாக இருப்பதாகவும், வெள்ளியும் அவுன்ஸ்க்கு 50 டாலருக்கு மேல் எண்ணிக்கையை எட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel