இன்று (அக்டோபர் 6, திங்கள்கிழமை) காலை துபாய் முழுவதும் வாகன ஓட்டிகள் பெரும் போக்குவரத்து நெரிசலை சந்தித்ததாகவும், பல முக்கிய வழித்தடங்கள் பீக் ஹவர்ஸில் பெரிதும் போக்குவரத்து பாதிப்பை எதிர்கொண்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
குறிப்பாக, ஷேக் சையத் சாலை (E11) மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலை (E311) ஆகியவை போக்குவரத்து நெரிசலால் மோசமாக பாதிக்கப்பட்டதாகவும், அல் கைல் சாலை மற்றும் அல் கூஸ் 4 ஐச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீண்ட வரிசைகள் மற்றும் மெதுவாக நகரும் போக்குவரத்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இன்டர்நேஷனல் சிட்டி மற்றும் துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் அருகே E311 இல் மேலும் நெரிசல் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் ராஸ் அல் கோர் சாலை மற்றும் அல் அவீர் சாலை நகரின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் குறிப்பிடத்தக்க தாமதங்களை எதிர்கொண்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) முன்னர் அறிவித்த கிங் பைசல் ஸ்ட்ரீட்டிலிருந்து அல் வஹ்தா ஸ்ட்ரீட் வரையிலான (துபாய் நோக்கி செல்லும்) எக்ஸிட் பாதை தற்காலிகமாக மூடலைத் தொடர்ந்து போக்குவரத்து நிலைமை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. முக்கியமான சாலை மேம்பாட்டுப் பணிகளை அனுமதிக்கும் இந்த மூடல், சனிக்கிழமை, அக்டோபர் 11, 2025 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால், பயணிகள் பாதிக்கப்பட்ட பாதைகளில் செல்லும்போது கூடுதல் பயண நேரத்தைத் திட்டமிடவும், பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்கவும், எச்சரிக்கையாக வாகனம் ஓட்டவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel