துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) வரும் அல்லது புறப்படும் பயணிகள், ஸ்மார்ட் கேட்ஸை பயன்படுத்துவதன் மூலம் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் நேரத்தை மிச்சப்படுத்தலாம், இது பயணிகளை சில நொடிகளில் செயல்முறையை முடிக்க அனுமதிக்கும் தானியங்கி அமைப்பாகும். இதில் சுவைக்கு விசிட்டில் வருபவர்கள் பயன்படுத்தலாமா என சந்தேகம் இருக்கலாம். இவ்வாறு துபாய் வருபவர்கள், அவற்றைப் பயன்படுத்த நீங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உங்கள் தகுதியை சரிபார்ப்பது எப்படி?
நீங்கள் இந்த ஸ்மார்ட் கேட்ஸை பதிவு செய்துள்ளீர்களா என்பதைக் கண்டறிய, gdrfad.gov.ae இல் உள்ள ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA-துபாய்) வலைத்தளத்தைப் பார்வையிடவும். அங்கு ‘Inquiry for Smart Gate Registration’ என்பதைத் தேர்ந்தெடுத்து ‘Start Service’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதன்பிறகு, பின்வரும் விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களை உள்ளிடவும்:
- கோப்பு எண் (file number) (உங்கள் விசா ஸ்டிக்கர் அல்லது இ-விசாவிலிருந்து)
- எமிரேட்ஸ் ஐடி அல்லது ஒருங்கிணைந்த எண் (Unified number)
- பாஸ்போர்ட் எண் மற்றும் தேசியம்
- உங்கள் பிறந்த தேதி, பாலினம் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை நிரப்பி, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் பதிவுசெய்திருந்தால், ‘Record is registered. You can use Smart Gates’ என்று திரையில் தோன்றும்.
ஸ்மார்ட் கேட்ஸை யார் பயன்படுத்தலாம்?
GDRFA இன் படி, 1.2 மீட்டர் அல்லது அதற்கு மேல் உயரம் கொண்ட மற்றும் பின்வரும் வகைகளில் ஒன்றைச் சேர்ந்த பயணிகள் தகுதியுடையவர்கள்:
- UAE மற்றும் GCC குடிமக்கள்
- UAE குடியிருப்பாளர்கள் (UAE residents)
- விசா-ஆன்-அரைவல் பயணிகள்
- ஷெங்கன் யூனியன் பயணிகள் (Schengen Union guests)
- முன் வழங்கப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் (Pre-issued visa holders)
இதில் பதிவுசெய்தவுடன், நீங்கள் இமிக்ரேஷனை எளிதாகக் கடந்து செல்லலாம், ஸ்டாம்பிங் தேவை இல்லை, காத்திருக்க தேவை இல்லை, உங்கள் முகம் அல்லது பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து எளிதில் வேலையை முடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel