கத்தாரில் வசிக்கும் இந்தியரான ரியாஸ் பனயாகண்டியில் (Riyas Panayakandiyil) என்பவர், பிக் டிக்கெட் அபுதாபியின் ‘Big Win’ போட்டியில் சீரிஸ் 279 டிராவின் போது முதல் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை பூர்விகமாகக் கொண்ட ரியாஸ், ஆன்லைனில் வாங்கிய 178286 என்ற டிக்கெட் எண்ணுடன் 150,000 திர்ஹம்ஸ் பரிசை வென்றதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “பிக் வின் போட்டிக்கு எனது பெயரைத் தேர்ந்தெடுத்ததற்காக பிக் டிக்கெட்டுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் கத்தாரில் இருந்து அபுதாபிக்குச் செல்ல முடியாததால், ரியாஸ் தனது நண்பர் ஆஷிக் மோட்டம் என்பவரை தனது சார்பாக போட்டியில் சுற்றவேண்டியுள்ள சக்கரத்தை (wheel) சுழற்றுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.
“தனிப்பட்ட காரணங்களால் அபுதாபிக்கு பயணம் செய்வது எனக்கு கடினம், ஆனால் எனது நண்பர் 150,000 திர்ஹம் வெல்வார் என்று எனக்கு முழு நம்பிக்கை இருந்தது,” என்று ரியாஸ் போட்டிக்கு அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட செய்தியில் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து 20 பேர் கொண்ட குழுவின் சார்பாக சக்கரத்தை சுழற்றி கொண்டிருந்த ஆஷிக், அதிகபட்ச பரிசுத் தொகையான 150,000 திர்ஹம்ஸ் இல் நின்ற போது உற்சாகமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பரிசுத் தொகையை 20 உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்வோம் என்று ஆஷிக் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel