ADVERTISEMENT

UAE தொழிலாளர் சட்டத்தின் விரிவான வழிகாட்டி: வேலை நேரம், கூடுதல் நேர வரம்பு, விடுப்பு மற்றும் ஊதிய விதிகள் என்ன..??

Published: 21 Oct 2025, 8:00 PM |
Updated: 21 Oct 2025, 8:00 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) தனியார் துறையில் முதலாளி மற்றும் தொழிலாளர்கள் இடையேயான வேலைவாய்பு உறவுகளை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பை கோடிட்டுக் காட்டும் விரிவான விழிப்புணர்வு வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை மற்றும் உற்பத்தித்திறன் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கு இடையே சமநிலையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன.

ADVERTISEMENT

இந்த வழிகாட்டி, அமீரகத்தின் தொழிலாளர் விதிமுறைகளுக்கு ஏற்ப, வேலை நேரம், கூடுதல் நேர ஊதியம், சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் விடுப்பு உரிமைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த தெளிவான தகவல்களை வழங்குகிறது.

வேலை நேரம் மற்றும் கூடுதல் நேர விதிமுறைகள்

ADVERTISEMENT

இந்த வழிகாட்டியின்படி, நிலையான வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே மற்றும் வாரத்திற்கு 48 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட சட்ட விதிகளின் கீழ் சில துறைகளுக்கு விதிவிலக்குகள் இருக்கலாம். அதேசமயம், கூடுதல் நேர வேலை ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரத்தை தாண்டக்கூடாது, மேலும் மொத்த வேலை நேரம் மூன்று வார காலத்திற்குள் 144 மணிநேரத்தை தாண்டக்கூடாது என்று கூறப்படுகிறது.

பகல்நேர வேலைக்கான அடிப்படை மணிநேர ஊதியத்தை விட குறைந்தபட்சம் 25 சதவீதம் அதிகமாக கணக்கிடப்படும் கூடுதல் நேர ஊதியத்திற்கு ஊழியர்களுக்கு உரிமை உண்டு. அதேபோல், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான கூடுதல் நேர வேலைக்கு, கூடுதல் நேர ஊதியம் வழக்கமான மணிநேர விகிதத்தை விட 50 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது. இந்த விதிகள் ஷிப்ட் அடிப்படையிலான ஊழியர்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

வாராந்திர விடுமுறை நாளில் வேலை செய்ய வேண்டிய ஊழியர்கள் மாற்று ஓய்வு நாள் அல்லது அவர்களின் அடிப்படை தினசரி ஊதியத்தில் 50 சதவீத அதிகரிப்புக்கு உரிமை உண்டு.

அலவன்ஸ் மற்றும் ஊதிய பாதுகாப்பு அமைப்பு

அனைத்து ஊழியர் சம்பளங்களும் உரிய தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும், ஊதிய பாதுகாப்பு அமைப்பு (WPS) மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வழிகாட்டி மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த அமைப்பு பொறுப்புணர்வை மேம்படுத்துவதுடன் அனைத்து கொடுப்பனவுகளும் முறையாக ஆவணப்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது.

மேலும், WPS தொடர்பான அனைத்து கட்டணங்களுக்கும் முதலாளிகள் மட்டுமே பொறுப்பு. ஊதிய பரிமாற்றங்கள் அல்லது WPS பதிவு தொடர்பான நேரடி அல்லது மறைமுக கட்டணங்களை தொழிலாளர்கள் செலுத்தக்கூடாது.

விடுப்பு உரிமைகள்

தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும் பல வகையான விடுப்புகளை இந்த வழிகாட்டி கோடிட்டுக் காட்டுகிறது. இதில் ஒவ்வொரு வருட சேவைக்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு அடங்கும். கூடுதல் விடுப்பு வகைகளில் வாழ்க்கைத் துணை இறந்ததைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் துக்க விடுப்பு, முதல் நிலை உறவினர் இறந்ததற்கு மூன்று நாட்கள், மற்றும் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குள் ஐந்து நாட்கள் பெற்றோர் விடுப்பு ஆகியவை அடங்கும்.

நிதி சிரமத்தில் உள்ள வணிகங்களுக்கான ஆதரவு

இதனிடையே, நிதி சிக்கல்களை அனுபவிக்கும் வணிகங்கள், இணக்கத்தை பராமரிக்கவும் ஊழியர் உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்ட ஆலோசனை மற்றும் ஆதரவிற்காக அமைச்சகத்தை அணுகுமாறு MoHRE ஊக்குவித்துள்ளது.

இந்த வழிகாட்டியை வெளியிடுவது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு நியாயமான, திறமையான மற்றும் வெளிப்படையான தொழிலாளர் சந்தையை உருவாக்குவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel