இந்த வார இறுதியில் ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் மழை நாட்கள் மற்றும் குளிரான வெப்பநிலையை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனெனில் நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அக்டோபர் 10, வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் 14, செவ்வாய் வரை வானிலை நிலைகளில் மாற்றம் ஏற்படும் என்று கணித்துள்ளது.
NCM வெளியிட்ட முன்னறிவிப்பின் படி, தெற்கிலிருந்து வரும் குறைந்த அழுத்த அமைப்பு மற்றும் மேல் மட்ட குறைந்த குளிர் மற்றும் ஈரப்பதமான காற்றைக் கொண்டு வருவதால், நாட்டில் மேகமூட்டம் மற்றும் கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து NCM வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், நாட்டின் பெரும்பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், சில இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிக மழை பெய்யும், இருப்பினும் மழை நாட்டின் உட்பகுதிகளிலும் பரவக்கூடும் என்றும், சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை கூட பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
இதன் விளைவாக, வெப்பநிலை குறைந்து குறிப்பிடத்தக்க குளிர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது, பலத்த காற்று திறந்த பகுதிகளில் தூசி மற்றும் மணலை கிளப்பும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடல் நிலைமைகளைப் பொறுத்த வரை, அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகிய இரண்டு இடங்களிலும் மிதமானது முதல் அதிவேகம் வரையிலும் அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த வானிலை தற்போதுள்ள பருவத்தின் பொதுவான நிலை என்றும், இது ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர் பருவத்திற்கு படிப்படியாக மாறுவதைக் குறிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel