ADVERTISEMENT

துபாய்: குளோபல் வில்லேஜ் செல்லும் பார்வையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரத்யேக பேருந்து சேவைகள்..

Published: 13 Oct 2025, 8:22 PM |
Updated: 13 Oct 2025, 8:30 PM |
Posted By: Menaka

துபாயின் புகழ்பெற்ற பொழுதுபோக்கு இடமான குளோபல் வில்லேஜ் அதன் புதிய சீசனுக்கு தயாராகி இருக்கின்றது. இந்நிலையில் குளோபல் வில்லேஜ் பார்வையாளர்களுக்கான RTA தனது பிரத்யேக சேவையை மீண்டும் தொடங்கவுள்ளது. வரும் அக்டோபர் 15 அன்று அதன் 30வது சீசனுக்காக திறக்கப்படும் பன்முக கலாச்சார தீம் பூங்காவிற்குச் செல்லும் பார்வையாளர்களுக்கு எலெக்ட்ரிக் அப்ரா சேவைகள் மற்றும் நேரடி பேருந்து வழித்தடங்கள் மீண்டும் இயக்கப்படுவதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, பார்வையாளர்கள் இப்போது RTA -வால் இயக்கப்படும் இரண்டு எலக்ட்ரிக் அப்ராக்களில் பூங்காவின் உள் இருக்கும் நீர்வழிகளில் பிரீமியம் மற்றும் வசதியான பயணத்தை அனுபவிக்கலாம். இந்த அப்ரா சேவை குளோபல் வில்லேஜ்ஜின் பெவிலியன்கள் மற்றும் ஏரிக்கரை காட்சிகளை ஆராய குடியிருப்பாளர்களுக்கு ஒரு அழகிய வழியை வழங்குகிறது.

துபாய் முழுவதும் நான்கு நேரடி பேருந்து வழித்தடங்கள்

அதுமட்டுமல்லாமல், குளோபல் வில்லேஜிற்கான அணுகலை இன்னும் எளிதாக்க, நகரத்தின் முக்கிய பகுதிகளை குளோபல் வில்லேஜுடன் இணைக்கும் நான்கு நேரடி பேருந்து வழித்தடங்களை RTA மீண்டும் தொடங்கியுள்ளது:

ADVERTISEMENT
  • ரூட் 102: அல் ரஷிதியா பஸ் நிலையம் – குளோபல் வில்லேஜ் (ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும்)
  • ரூட் 103: யூனியன் பஸ் நிலையம் – குளோபல் வில்லேஜ் (ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும்)
  • ரூட் 104: அல் குபைபா பஸ் நிலையம் – குளோபல் வில்லேஜ் (ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும்)
  • ரூட் 106: மால் ஆஃப் தி எமிரேட்ஸ் பஸ் நிலையம் – குளோபல் வில்லேஜ் (ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும்)

ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வரும் குளோபல் வில்லேஜ்ஜின் இந்த ஆண்டிற்கான 30வது சீசன், வரும் அக்டோபர் 15, 2025 முதல் தொடங்கி அடுத்த ஆண்டு மே 10, 2026 வரை நடைபெறவுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு எண்ணற்ற பல புதுமைகளுடன் இந்த சீசன் இருக்கும் என்பதால், இது அற்புதமான பதிப்பாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதியளிக்கின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT