வடகிழக்கு அரேபியக் கடலில் உருவாகும் வெப்பமண்டல புயல், வகை 1 புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று ஓமன் வானிலை அதிகாரிகள் சனிக்கிழமை அறிவித்துள்ளனர். வகை 1 புயல் என்பது உலகளவில் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான சஃபிர்-சிம்ப்சன் அளவுகோலில் (Saffir–Simpson scale) மிகக் குறைந்த நிலையாகும். இது மணிக்கு 119 முதல் 153 கிமீ வேகத்தில் காற்று வீசும் திறன் கொண்டது, மேலும் அதன் சேதங்கள் குறைந்தபட்சம் முதல் மிதமானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
“Shakhti” என்று பெயரிடப்பட்ட இந்த புயல், தற்போது அதன் மையத்திற்கு அருகில் மணிக்கு 81–99 கிமீ வேகத்தில் காற்று வீசகூடிய அளவிற்கான நிலையில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வேகம் வேகம் மணிக்கு 90–113 கிமீ வேகத்தில் உயரக்கூடும் என்றும், இது சஃபிர்-சிம்ப்சன் அளவில் சூறாவளி நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஓமன் வானிலை ஆய்வின்படி, இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை இந்திய நிலப்பகுதியை நோக்கி கிழக்கு நோக்கிச் சென்று பின்னர் மத்திய அரேபியக் கடலில் தென்மேற்காக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில், புயல் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் புயல் இப்போது ஓமானில் உள்ள ராஸ் அல் ஹாட்டிலிருந்து (Ras Al Hadd) சுமார் 400 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக செயற்கைக்கோள் தரவு காட்டுகிறது. இதனால், ஓமனுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், ஓமன் மறைமுக விளைவுகளை மட்டுமே சந்திக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் பின்வரும் பாதிப்புகள் அடங்கும்:
- தெற்கு அல் ஷர்கியா மற்றும் அல் வுஸ்டா கடற்கரைகளில் மேகமூட்டம் மற்றும் மழை பெய்ய வாய்ப்பு .
- கடல் அலை உயரம் 2 முதல் 3.5 மீட்டர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தெற்கு அல் ஷர்கியா, மஸ்கட் மற்றும் அல் வுஸ்டாவின் சில பகுதிகளில் அதிக அலைகளின் போது தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊடுருவும் அபாயம் உள்ளது.
எனவே, புயல் உருவாகும்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel