ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களும் இனி இ-பாஸ்போர்ட்களை மட்டுமே பெறுவார்கள் என்று துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் (CGI) அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்திய குடிமக்களுக்கான பயண ஆவணங்களை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய படியாக, அக்டோபர் 28 அன்று இந்தியாவின் இ-பாஸ்போர்ட் அமைப்பு உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?
இ-பாஸ்போர்ட் காகிதம் மற்றும் மின்னணு வடிவங்களை ஒருங்கிணைக்கிறது. இது உட்பொதிக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) சிப் மற்றும் ஆண்டெனா ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது இ-பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பாதுகாப்பாக சேமிக்கிறது என கூறப்பட்டுள்ளது. பல அமீரக குடியிருப்பாளர்கள் ஏற்கனவே புதிய RFID-இயக்கப்பட்ட பாஸ்போர்ட்களைப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விண்ணப்பதாரர்கள் இப்போது மேம்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் சேவா திட்டத்தை (GPSP 2.0) பயன்படுத்தி தங்கள் பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும், இது காத்திருப்பு நேரத்தை கணிசமாகக் குறைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய அமைப்பு விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை நிரப்ப இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும், விண்ணப்பதாரர்கள் பழைய பாஸ்போர்ட் எண்ணை உள்ளிட்டு, சரிபார்ப்பை முடித்து, விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பித்தால் செயல்முறை முடிந்து விடும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான விருப்பம்
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதர் சதீஷ் சிவன், ஏற்கனவே காகித விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கு எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது “ஏற்கனவே தங்கள் பாஸ்போர்ட்டுகளைப் புதுப்பிப்பதற்கான அப்பாய்மெண்ட்களை கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தற்போதைய விண்ணப்பத்தைத் தொடரலாம் மற்றும் பழைய முறையில் பாஸ்போர்ட்டைப் பெறலாம் அல்லது புதிய இ-பாஸ்போர்ட்டைப் பெற தங்கள் விவரங்களை ஆன்லைனில் நிரப்பலாம்” இந்தியத் தூதர் சதீஷ் சிவன் விளக்கியுள்ளார்.
மேலும் புதிய RFID சிப் இ-பாஸ்போர்ட்டை மிகவும் பாதுகாப்பானது மற்றும் மோசடி செய்வது கடினம் என்று அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுவதாவது: “யாராவது பாஸ்போர்ட்டை போலியாகவோ அல்லது மாற்றவோ முயன்றால், அது இமிகிரேஷனில் உடனடியாகக் கண்டறியப்படும், ஏனெனில் அச்சிடப்பட்ட தரவு சிப் தரவுடன் பொருந்த வேண்டும்” என்று விவரிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, புதிய பாஸ்போர்ட்டுகளுக்கு ICAO- இணக்கமான பயோமெட்ரிக் புகைப்படங்களும் தேவை, அதில் இருந்து பயோமெட்ரிக் அம்சங்கள் டிஜிட்டல் முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த கட்டத்தில் கைரேகைகள் அல்லது பயோமெட்ரிக்ஸ் வெளிநாடுகளில் சேகரிக்கப்படாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
செயலாக்க நேரம் அல்லது கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை
எவ்வாறாயினும், பாஸ்போர்ட் வழங்கும் நேரங்கள் மற்றும் சேவை கட்டணங்கள் மாறாமல் இருக்கும் என்பதை CGI உறுதிப்படுத்தியது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய போர்டல் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
https://mportal.passportindia.gov.in/gpsp/AuthNavigation/Login
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel