அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்கும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி முதல் எமிரேட் அதிகாரிகள் ஷேக் சையத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டில் மாறுபட்ட வேக வரம்பு (variable speed limit) முறையை அறிமுகப்படுத்துவார்கள் என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (அபுதாபி மொபிலிட்டி) அறிவித்துள்ளது.
இந்த புதிய அமைப்பு நிகழ்நேர போக்குவரத்து மற்றும் வானிலை நிலைமைகளின் அடிப்படையில் தானாகவே வேக வரம்புகளை சரிசெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, வாகன ஓட்டிகள் எலெக்ட்ரானிக் பலகைகளில் காட்டப்படும் வரம்புகளை உன்னிப்பாகக் கவனித்து, அவற்றை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அபுதாபி மொபிலிட்டியின் கூற்றுப்படி, மாறுபட்ட வேக வரம்பு பின்வரும் சூழ்நிலைகளில் செயல்படுத்தப்படும்:
- மூடுபனி அல்லது கனமழை போன்ற பாதகமான வானிலையின் போது
- அதிக போக்குவரத்து நேரங்களில் நெரிசலைக் குறைக்க செயல்படுத்தப்படும்
- சாலை இயக்கத்தை பாதிக்கும் பெரிய நிகழ்வுகளின் போது
- சாலைப்பணிகள் நடைபெறும் போது
தலைநகரின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், சீரான, திறமையான போக்குவரத்து ஓட்டத்தை பராமரிப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருப்பதாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்..
அதே நேரத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில், எமிரேட்டின் பரந்த போக்குவரத்து பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாக, ஷேக் சையத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டில் வேக வரம்பு 120 கிமீ/மணியிலிருந்து 100 கிமீ/மணி ஆகக் குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel